[ad_1]
Last Updated:
பாஸ்மதி அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது இந்தியாவின் உயர்தர அரிசி ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இது இறுதியில் இந்திய விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி நாடாக இருக்கும் பிலிப்பைன்ஸுக்கு அரிசி ஏற்றுமதியை இந்தியா அதிகப்படுத்த உள்ளது. பிலிப்பைன்ஸ் இந்தியாவில் இருந்து உணவு இறக்குமதியை தாராளமயமாக்கியுள்ள நிலையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, முன்னணி ஏற்றுமதியாளர்கள் அடங்கிய முக்கிய குழு ஒன்று அடுத்த மாதம் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பாஸ்மதி அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க பிலிப்பைன்ஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது இந்தியாவின் உயர்தர அரிசி ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இது இறுதியில் இந்திய விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே இந்த இலக்கை அடைய, வேளாண் செயலாளர் பிரான்சிஸ்கோ பி.டியு லாரல் ஜூனியர் தலைமையிலான பிலிப்பைன்ஸின் உயர்மட்டக் குழு சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, APEDA மற்றும் இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியது.
வேளாண் செயலாளர் பிரான்சிஸ்கோ பி. டியு லாரல் ஜூனியர் தலைமையிலான பிலிப்பைன்ஸ் குழுவானது அரிசி, எருமை இறைச்சி, காய்கறிகள், பழங்கள் மற்றும் வேர்க்கடலை உள்ளிட்ட முக்கிய இந்திய உணவுப் பொருட்களின் இறக்குமதியை கணிசமாக அதிகரிக்க ஒப்புக்கொண்டது. உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு இடையில் பிலிப்பைன்ஸின் விநியோகத் தளத்தை விரிவாக்க உதவும் வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க முன்னுரிமை அளிப்பதற்கான உறுதிப்பாட்டை அந்நாட்டின் குழுவுடன் நடத்தப்பட்ட விவாதங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இந்த கலந்துரையாடல்களின்போது, இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது என்ற முடிவும் எடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்திய-பிலிப்பைன்ஸ் உறவுகளில் ஒரு முக்கிய வளர்ச்சியைக் குறிக்கிறது மற்றும் விவசாயம், வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து தீவிரமாக பணியாற்றப் போவதையும் பிரதிபலிக்கிறது.
இறக்குமதி விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் மேலும் நெருங்கிவர சீனப் பொருட்களை சார்ந்திருப்பதைக் குறைத்தல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் வலுவான இந்தோ-பிலிப்பைன்ஸ் பொருளாதார உறவுகளை முன்னெடுப்பது உள்ளிட்டவை முக்கிய நோக்கமாக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி சார்ந்த சமீபத்திய ஒத்துழைப்புகள் “மேம்பட்ட உணவுப் பாதுகாப்பு, பொருளாதார விரிவாக்கம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தகத்திற்கு” பங்களிக்கும். இந்தியா 2024ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸுக்கு 413 மில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது பிலிப்பைன்ஸின் மொத்த விவசாய இறக்குமதியில் வெறும் 2 சதவீதமாகும்.
விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு பிலிப்பைன்ஸ் ஒரு முக்கியமான சந்தையாகும். 2024ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் பாதி அரைக்கப்பட்ட அரிசி, கோதுமை மற்றும் ஆயில் கேக், உணவு தயாரிப்புகள் மற்றும் பாமாயில் உள்ளிட்ட முக்கிய இறக்குமதிகள் அடங்கும்.
September 04, 2025 2:24 PM IST
பிலிப்பைன்ஸுக்கு அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகப்படுத்த உள்ள இந்தியா…! ஏன் தெரியுமா…?