பசிபிக் பிராந்தியத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியதால், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தாய்வான், ஜப்பான் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இது வரும் நாட்களில் சீனாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கு எச்சரிக்கை
இதன்படி படிப்படியாக வலுவிழந்து வரும் பாவி புயல், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் கிழக்கு சீன நகரமான வென்சூவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மக்களுக்கு கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சீனா மற்றும் தாய்வானைப் பாதித்த மேசாக் புயலால் சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் வடியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

