பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென், 29-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நாட் நுயெனை எதிர்த்து விளையாடினார்.
இதில் லக்ஷயா சென் 7-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபனில் நாட் நுயெனை, லக்ஷயா சென் வீழ்த்திய நிலையில் தற்போது முதல் சுற்றிலேயே அவரிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.