• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 316-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் லோயிஸ் போய்சனுடன் மோதினார். 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லோயிஸ் போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 7-ம் நிலை வீராங்கனையான சகநாட்டைச் சேர்ந்த மேடிசன் கீஸஸுடன் மோதினார். 2 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோ கோ காஃப் 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதியில் கால்பதித்தார்.

கோவாவை வீழ்த்தியது டெல்லி: யுடிடி சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கோவா, டெல்லி அணியுடன் மோதியது. இதில் டெல்லி அணி 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் க்யூக் இசாக் (சிங்கப்பூர்) 3:0 என்ற கணக்கில் தியாகோ அப்பலோனியாவை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கோவா அணியின் ஜெங் ஜியான் 3:0 (11-9, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் தியா சித்தலேவை தோற்கடித்தார். கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் மரியா சியாவோ (ஸ்பெயின்), சத்தியன் ஞானசேகரன் ஜோடி 2:1 (8-11, 11-5, 11-8) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன் 2:1 (8-11, 11-9, 11-9) என்ற கணக்கில் ஹர்மீத் தேசாயை வென்றார். கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் மரியா சியாவோ 3:0 (11-3, 11-7, 11-6) என்ற செட் கணக்கில் சயாலி வானியை தோற்கடித்தார்.

டிஎன்பிஎல் தொடர் இன்று தொடக்கம்: கோவை – திண்டுக்கல் பலப்பரீட்சை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 5) தொடங்குகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இரவு 7.15 மணிக்கு நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் இந்த அணிகள் மோதியிருந்தன. இதனால் இன்றைய ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகியுள்ள சாய் சுதர்சன் இல்லாததால், கோவை கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் கூறும்போது, “நாங்கள் செயல்படுத்தும் வியூகங்கள், நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் பாணியும்தான் ஒரு நல்ல போட்டியை தீர்மானிக்கும்” என்றார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கூறும்போது,“கோப்பையை தக்கவைத்துக் கொண்டு, அணியின் ஆதிக்கத்தைத் தொடர முனைப்புடன் உள்ளோம்’’ என்றார்.போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஆகிய சானல்களில் நேரலையாக காணலாம்.



Read More

Previous Post

ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் மோசடி: 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ரயில்வே | Railways blocks 2.5 crore fake accounts

Next Post

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

Next Post
மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin