Last Updated:
கார்டு ஹோல்டர்களுக்கு பொறுப்பான உறவு மற்றும் சேவை மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, வசதியான வாடிக்கையாளர்கள் சிறந்த உதவி பெறுவதை உறுதி செய்கிறது.
கோடக் மகேந்திரா வங்கி ஆனது ‘Kotak Solitaire’ என்ற பெயரில் ஒரு பிரீமியம் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பலன்கள் மற்றும் வங்கி சார்ந்த திட்டங்களைக் கொண்ட இந்த கிரெடிட் கார்டு, இந்தியாவின் வசதியான நபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோடக் மகேந்திரா வங்கியுடன் நீண்ட கால உறவு கொண்டுள்ள அதிக சொத்து மதிப்பு கொண்ட கடன் நபர்களை இலக்காகக் கொண்டு மகேந்திரா வங்கி இந்த ‘Kotak Solitaire’ என்ற பிரீமியம் கிரெடிட் கார்டை வெளியிட்டுள்ளது.
வங்கி வழங்கும் வழக்கமான சேவைகளைப் போல அல்லாமல் ‘Kotak Solitaire’ என்பது அழைப்பு மூலமாக மட்டுமே பெறப்படும் ஒரு திட்டமாக உள்ளது. எனினும் வசதியான கஸ்டமர்கள் என்று வரும்போது அவர்களுடைய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் மட்டுமே பொறுத்து இது அமையாது. மாறாக வங்கி மற்றும் அவர்கள் இடையே உள்ள மதிப்பு மிகுந்த உறவு, அவர்கள் செய்த டெபாசிட்கள், முதலீடுகள், கடன்கள், இன்சூரன்ஸ் மற்றும் டிமேட் போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.
கோடக் மகேந்திரா வங்கியின் பொருளாதார சேவைகளோடு வலிமையான ஒரு உறவு மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வரலாறு கொண்ட தனி நபர்கள் அல்லது குடும்பங்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்படும். இதன் மூலமாக ‘Kotak Solitaire’ என்பது உண்மையில் ஒரு பிரத்தியேகமான ஆஃபராக இருக்கும். ‘Kotak Solitaire’ அழைப்பு பெறும் நபர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கடன்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாழ்க்கை முறை சலுகைகள் வழங்கப்படும். வங்கியில் கடன்கள் வாங்குவது மற்றும் ஆரோக்கியம் சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றின் ஒரு சிறப்பு அனுபவத்தைப் பெறுவதற்கு இந்த பிரீமியம் கார்டு உதவும். அது மட்டுமல்லாமல், உங்களுடைய இலக்குகள் மற்றும் கனவுகளை பூர்த்தி செய்யும் வகையிலான இன்சூரன்ஸ் மற்றும் செல்வ சேமிப்பு யுக்திகள் அடங்கிய பலன்களையும் இந்த பிரீமியம் கார்டு கொண்டுள்ளது.
‘Kotak Solitaire’ பிரீமியம் கார்டில் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் வரையிலான ஹோம் லோன், பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவை அடங்கும். நீங்கள் மாத வருமானம் பெறும் நபராகவோ அல்லது தொழிலதிபராகவோ இருந்தால், உங்களுடைய தேவையைப் பொறுத்து குறிப்பிட்டு அமைக்கப்பட்ட பொருளாதாரத் தீர்வுகளை இதன் மூலமாகப் பெறுவீர்கள். மேலும் குடும்பத்தை மையமாகக் கொண்டு பகிரப்பட்ட கடன் உச்சவரம்புகள் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கான சலுகைகள் ஆகியவற்றையும் இந்த பிரீமியம் கார்டு வழங்குகிறது.
கார்டு ஹோல்டர்களுக்கு பொறுப்பான உறவு மற்றும் சேவை மேலாளர்கள் நியமிக்கப்பட்டு, வசதியான வாடிக்கையாளர்கள் சிறந்த உதவி பெறுவதை உறுதி செய்கிறது. எனவே இந்த ஒரு பிரீமியம் கார்டு மூலமாக வங்கி சேவைகள், சொத்து சேர்ப்பு, இன்சூரன்ஸ் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய அனைத்துமே கிடைக்கிறது. பிரீமியம் கார்டு பற்றிய பிற சலுகைகளைப் பற்றி பேசும்போது, இதற்கு எந்த ஒரு ஆண்டு கட்டணமும் கிடையாது. அது மட்டுமல்லாமல் முதன்மை கார்டு ஹோல்டர்களுக்கு அளவில்லாத விமான லான்ச் சேவை மற்றும் ஆட்-ஆன்கள் வழங்கப்படுகிறது.
மேலும் கோடக் அன்பாக்ஸ் மூலமாக பயணங்களுக்கு கஸ்டமர்கள் 10 சதவீத ஏர் மைல்களைப் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் பிற செலவுகளுக்கு 3 சதவீத ஏர் மைல்கள் வழங்கப்படுகிறது. இந்த கார்டை பயன்படுத்தி விமானங்கள், ஹோட்டல் போன்றவற்றை புக்கிங் செய்யலாம். ஒரு ஸ்டேட்மெண்ட் சைக்கிளில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் ஏர் மைல்கள் என்ற உச்சவரம்பை கோடக் மகேந்திரா வங்கி அமைத்துள்ளது.
July 31, 2025 12:49 PM IST