• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பம் அறிமுகம்

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பம் அறிமுகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


37

– மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை மறுசீரமைக்க அங்கீகாரம்

பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிவெனாக் கல்வியை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக மொழிநுட்ப அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து திட்டமிட்டுள்ளது. அதன்மூலம், பிரிவெனாக்களிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பிக்கு மாணவர்கள் / மாணவர்களுக்கு இலங்கையின் தேசிய பௌத்த மரபுரிமைகளை ஆராய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தக் கூடியதாக அமையும்.

அதற்கமைய, ஒரு பிரிவெனாவுக்கு குறைந்தது இரண்டு கணணிகள், ஸ்மார்ட் திரை மற்றும் அச்சு இயந்திரமொன்றையும் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. பொதுநலவாய அமைப்பின் Blue charter Project Incubator நிறுவனத்தின் நிதியனுசரணை மூலம் கண்டல்தாவரப் பாதுகாப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

2023 ஆம் ஆண்டின் பொதுநலவாய அமைப்பின் Blue charter Project Incubator நிறுவனத்தினால் வழங்கப்படும் நிதியனுசரணை மூலம் கண்டல்தாவரப் பாதுகாப்புக்காக நிதியனுசரணைகளை வழங்குவதற்காக பொதுநலவாய நாடுகளிடமிருந்து கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக இலங்கை சமர்ப்பித்துள்ள 02 கருத்திட்ட முன்மொழிவுகள் பொதுநலவாய அமைப்பின் Blue charter Project Incubator நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, இலங்கையில் கண்டல் தாவரங்களின் காபன் படிமத்தைக் கணிப்பிடுதல் தொடர்பாக ஆராய்தல் மற்றும் செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கண்டல்தாவரங்கள் மற்றும் கடற்புல் இடைவலையத்தை வரைபடமாக்கல் கருத்திட்டத்திற்கு நிதியனுசரணை வழங்குவதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.குறித்த கருத்திட்டங்கள் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும், அதற்கமைய, குறித்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 2024-2026 காலப்பகுதிக்கான இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான உயர்கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக 2017-2020 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தங்களுடன் கூடியதாக 2024-2026 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, உயர்கல்வித் துறையில் அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாற்றிக் கொள்ளல், ஒருங்கிணைந்த ஆய்வுகளை நடாத்துதல், இருதரப்பினரின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவித்தல், இருதரப்பினராலும் உடன்பாடு எட்டப்படுகின்ற துறைகளில் முதலாவது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்புக்களுக்கான புலமைப்பரிசில் பரிமாற்றம் மற்றும் இருநாட்டு பல்கலைக்கழகங்கள் / ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே மாணவர்கள்/ கல்வியியலாளர்கள் பரிமாற்றம் போன்ற நோக்கங்களுக்காக 2024-2026 காலப்பகுதி வரை செல்லுபடியாகும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் வியட்நாம் சோசலிச குடியரசுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள காணித் துண்டை இலங்கை மின்சார சபைக்கு வழங்கல்

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நகரத்தை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான மின்சாரத் தேவை அதிகரித்துள்ளமையால், குறித்த பிரதேசத்தில் உப மின் நிலையத்தை அமைப்பதற்காக ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள மாஹேனவத்த எனும் பெயரிலான காணித்துண்டை வழங்குமாறு இலங்கை மின்சார சபையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள 02 ஏக்கர் 03 றூட் 15.41 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை அரச பிரதான விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கை மின்சார சபைக்கு 30 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இராஜகிரியவில் அமைந்துள்ள காணியை 50 வருடகாலத்திற்கு மீண்டும் வழங்கல்

1999.05.13 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இராஜகிரிய வெலிகட பிரதேசத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 30 பேர்ச்சர்ஸ் காணி, ஆய்வு நடவடிக்கைகளுக்காகக் கட்டிடமொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக சலுகை குத்தகை அடிப்படையில் உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.குறித்த காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்தின் தலைமை அலுவலக் கட்டிடம் தற்போது திருத்தப்பட வேண்டியுள்ளமையாலும், அதற்குக் குறிப்பிட்டளவு நிதி முதலீடு செய்யப்பட வேண்டியுள்ளமையாலும், இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த காணியை மீண்டும் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்குமாறு அந்நிறுவனம் கோரிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, அரச விலைமதிப்பீட்டாளரால் தீர்மானிக்கப்படுகின்ற வருடாந்த வாடகையை அறவிட்டு 50 வருடங்களுக்கு குறித்த காணித்துண்டை உடலியல் நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்திற்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக பதில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. ஹிங்குராக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்

தற்போது விமானப் படையினரால் முகாமைத்துவப்படுத்தப்பட்டு வரும் ஹிங்குராக்கொட விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவைகளின் தரநியமங்களுக்கமைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அதற்குரிய ஏனைய பணிகளுக்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, வரையறுக்கப்பட்ட விமானநிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் விதந்துரைகளுக்கமைய ஹிங்குராக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி , துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கை மறுசீரமைத்தல்

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள துணைக் கருத்திட்டங்களின் கட்டுமான நடவடிக்கைகளை இராணுவத்திடம் வழங்குவதற்காக 2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விளையாட்டு மைதானத்தின் கனிஸ்ட விளையாட்டரங்கு மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுத் திடலின் இரண்டாவது பார்வையாளர் அரங்கின் கூரைகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் மூலம் மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. கந்தர மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை நீடித்தல் மற்றும் மொத்தச் செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்தல்

கந்தர மீன்பிடி இறங்குதுறையில் மீன்பிடித் துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்காக 2019.07.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் 2023 டிசம்பர் மாதத்தில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பினும், கொவிட் 19 தொற்று நிலைமையாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இவ்வேலைத்திட்டத்தை எதிர்பார்த்தவாறு பூர்த்தி செய்வதற்கு முடியாமல் போயுள்ளது. அதற்கமைய, வேலைத்திட்டத்திற்கமைவான தரையை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை கருத்திட்டக் காலப்பகுதியான 2023 டிசம்பர் மாதம் தொடக்கம் 2026 டிசம்பர் வரைக்கும் நீடிப்பதற்கும், விலை தளம்பல்களின் அடிப்படையில் மொத்தச் செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்வதற்கும் கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. இலங்கை – யுனெஸ்கோ பங்காண்மையின் 75 ஆவது ஆண்டு நிறைவுவிழா

இலங்கை – யுனெஸ்கோ பங்காண்மை இவ்வாண்டில் 75 வருடங்களை எட்டியுள்ளதுடன், அதற்காக ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்காக இலங்கை – யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு, கல்வி அமைச்சு, ஏற்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பல நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கை – யுனெஸ்கோ 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் அடைவுகளைக் கொண்டாடுதல்,யுனெஸ்கோவால் இலங்கையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள மரபுரிமைகள் தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகங்களைத் தெளிவூட்டுவதன் மூலம் சுற்றுலாத் துறையை ஊக்குவித்தல், இருதரப்பினர்களுக்கிடையே நிலவுகின்ற புரிந்துணர்வை மேலும் மேம்படுத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 75 ஆவது ஆண்டு நிறைவு விழா 2024.07.16 அன்று தாமரைத் தடாக மண்டபத்தில் நடாத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் பொறுப்புக்கள், நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல்

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் முழுமையான வர்த்தக நடவடிக்கைகள் 2021.05.18 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று (03) வருடங்களுக்கு மின்னுற்பத்தி நிலையத்தின் பொறுப்புக்கள், நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதற்காக இலங்கை மின்சார சபை Vestas Wind Lanka (Pvt) Limited உடன் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தத்தின் ஒப்பந்தகாலம் 2024.05.17 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. அதனால், குறித்த பணிகளுக்காக புதிய சேவை விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, போட்டி விலைமனுக் கோரல் முறைமையைக் கடைப்பிடித்து பொருத்தமான சேவை விநியோகத்தரைத் தெரிவு செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமரப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இரட்டை எரிபொருள் கொள்ளளவுடன் கூடிய 200 மெகாவாற்று உள்ளகத்தகன இயந்திரத்தாலான கெரவலப்பிட்டி இயற்கை வாயு நிலையம்

இரட்டை எரிபொருள் கொள்ளளவுடன் கூடிய 200 மெகாவாற்று உள்ளகத்தகன இயந்திரத்தாலான கெரவலப்பிட்டி இயற்கை வாயு நிலையக் கருத்திட்டமானது, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டு 2023-2042 காலப்பகுதிக்கான நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தின் மூலம் அடையாளங் காணப்பட்ட கருத்திட்டமாகும். இக்கருத்திட்டத்திற்காக கெரவலப்பிட்டி வரையறுக்கப்பட்ட சொபாதனவ் கம்பனிக்கு அருகிலுள்ள காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சுயாதீன வலுசக்தி உற்பத்திகளுக்கான 20 வருடங்களுக்கான கட்டியெழுப்பல் – உரித்துக் கொள்ளல் – நடைமுறைப்படுத்தல் – உரித்து ஒப்படைத்தல் (BOOT) அடிப்படையில் குறித்த மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக போட்டி விலைமனுக்கோரல் செயன்முறையைக் கடைப்பிடித்து பொருத்தமான முதலீட்டாளர்களைக் கண்டறிவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. டீசல் (0.05% M.S) நான்கு கப்பல்கள் (04) கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கல்

2024.08.01 தொடக்கம் 2024.12.31 வரையான காலப்பகுதிக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபனத்திற்கு டீசல் (0.05% M.S) நான்கு கப்பல்கள் (04) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, கிடைக்கப்பெற்றுள்ள விலைமுறிகளை மதிப்பீடு செய்த பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தர பெறுகைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, குறித்த காலப்பகுதியில் 280,000 +/ -5% டீசல் பரல்கள் வீதம் 04 கப்பல்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Zhongxi Energy Development (Ningbo) Co. Ltd China இற்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இலங்கை பொலிஸிற்கான கட்டுமான வேலைத்திட்டங்களின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல்

இலங்கை பொலிஸிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் பல கட்டுமானக் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டில் கொவிட் 19 தொற்று நிலைமையாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளாலும் 2021-2023 வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த கீழ்க்காணும் கருத்திட்டங்கள் எதிர்பார்த்தவாறு பூர்த்தி செய்வதற்கு இயலாமல் போயுள்ளது.
• குமாரன் ரத்னம், கொழும்பு 02 இல் அமைந்துள்ள திருமணமான கனிஷ்ட தர அலுவலர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்
• கட்டான தேசிய பொலிசு பயிற்சி நிறுவனத்தின் வதிவிடக் கட்டிட வேலைத்திட்டம்
• கொள்ளுப்பிட்டி பொலிசு நிலையத்தின் கட்டிடத்தின் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்தல்

குறித்த வேலைத்திட்டங்களில் எஞ்சிய வேலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவற்றை முழுமையான செலவு மதிப்பீட்டைத் திருத்தம் செய்வதற்கும், கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்யும் காலத்தை 2024 – 2027 வரை நீடிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2019 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தேசிய புத்தாக்க முகராண்மைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2022 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ள தேசிய புத்தாக்க முகராண்மை நிறுவனத்தால் சமூக, விஞ்ஞான, தொழிநுட்ப, பாதுகாப்பு, சுற்றாடல் மற்றும் சேவைகள் புத்தாக்கம் பற்றிய தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சமகாலத் தேவைகளுக்கமைய, 2019 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தேசிய புத்தாக்க முகராண்மைச் சட்டத்தின் பிரகாரம் நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக குறித்த சட்டத் திருத்தங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத் திருத்தம்

நிறுவப்பட்ட அல்லது இயங்காத மத்தியஸ்த சபைகள், மத்தியஸ்த சபைகளால் வெளியிடப்பட்டுள்ள பிணக்குகளுக்கு தீர்க்கப்படாத சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்படுகின்ற தாமதங்கள் போன்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கும் மற்றும் இருதரப்பினரும் இணக்கத்திற்கு எட்டாதவிடத்து நீதிமன்றை நாடுவதைத் தடுக்காதிருப்பதற்கும் 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத்தின் 07 ஆம் பிரிவைத் திருத்தம் செய்வதற்காக 2023.09.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் திருத்தப்பட்ட சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 



Read More

Previous Post

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post

Anbumani: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்.. அன்புமணி ஆவேசம்-anbumani demanded the release of 10 fishermen arrested by sri lankan navy

Next Post
Anbumani: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்.. அன்புமணி ஆவேசம்-anbumani demanded the release of 10 fishermen arrested by sri lankan navy

Anbumani: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்.. அன்புமணி ஆவேசம்-anbumani demanded the release of 10 fishermen arrested by sri lankan navy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin