• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.

லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் காதலியிடம் இருந்து 10,000 யுவான் (சுமார் ₹1.24 லட்சம்) கடனாகப் பெற்றிருந்தார். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக, அவரைத் தேடி வருகிறார்.

1991 ஆம் ஆண்டில் லீயும், மாவும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தபோது சந்தித்திருக்கின்றனர். அப்போது லீக்கு 23 வயது, மாவுக்கு 25 வயது. மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் எட்டு ஆண்டுகள் காதலித்திருக்கின்றனர்.

காதல்

லீயின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், லீ தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சுமுகமாகப் பிரிந்தனர்.​

பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு லீ சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்தபோது, அவருக்குப் பண உதவி தேவைப்பட்டது.

அப்போது அவரது முன்னாள் காதலியான மா, எந்தத் தயக்கமும் இன்றி 10,000 யுவான் பணத்தை அவருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரிய தொகையாகக் கருதப்பட்டது என்று லீ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.​​

பணம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, லீ தனது மொபைல் போனைத் தொலைத்ததால், மாவின் தொடர்பு எண்ணை இழந்தார்.

அன்று முதல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்போது “சியோலி ஹெல்ப்ஸ் யூ” என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியுடன் மாவைத் தேடி வருகிறார். இந்த தேடுதல் முயற்சிக்கு லீயின் மனைவியும் ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Read More

Previous Post

அமெரிக்க சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்

Next Post

வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளைக் கோரி, கே.ஜி. பாப்பன் குடியிருப்பாளர்கள் BNM இல் போராட்டம் நடத்தினர். – Malaysiakini

Next Post
வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளைக் கோரி, கே.ஜி. பாப்பன் குடியிருப்பாளர்கள் BNM இல் போராட்டம் நடத்தினர். – Malaysiakini

வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளைக் கோரி, கே.ஜி. பாப்பன் குடியிருப்பாளர்கள் BNM இல் போராட்டம் நடத்தினர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin