• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானிய குடியேற்ற விதிகளில் அதிரடி திருப்பம்: அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியமில்லை? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானிய குடியேற்ற விதிகளில் அதிரடி திருப்பம்: அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியமில்லை? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகள் தொடர்பாக வெளியான புதிய விளக்கம், அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லேபர் அரசின் கீழ் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள Shabana Mahmood, குடியமர்வு உரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, குற்றப் பின்னணி இல்லாதிருத்தல், ஆங்கிலப் புலமை கொண்டிருத்தல் மற்றும் கடன் இல்லாதிருத்தல் போன்ற தகுதிகள் அவசியம் என கூறப்பட்டது.

இந்த சூழலில், எல்லை பாதுகாப்பு அமைச்சரான Alex Norris வெளியிட்ட விளக்கம் அரசியல்வாதிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. ஷபானா மஹ்மூத் அறிவித்த நிபந்தனைகள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார். அதாவது, அகதிகளாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலப் புலமை கட்டாய நிபந்தனையல்ல என அவர் கூறினார்.

உள்துறை அலுவலக வட்டாரங்கள், காலவரையறையின்றி பிரித்தானியாவில் தங்குவதற்காக விண்ணப்பிக்கும் அகதிகள், குறிப்பிட்ட கட்டத்தில் ஆங்கில மொழித் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என வலியுறுத்தினாலும், நோரிஸ் அதற்கு மாறான சட்டப்பூர்வ காரணங்களை முன்வைத்தார். அகதிகள் நிலை தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களுக்கும், மனித உரிமைகள் தொடர்பான European Convention on Human Rights உடன்படிக்கைக்கும் கையொப்பமிட்டுள்ள நாடு என்பதால், பிரித்தானியா புகலிடம் கோரி வரும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க சட்டபூர்வ கடமை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஒருவரை பிரித்தானியாவிலிருந்து அகற்றும் எந்த நிலையிலும், அவர்களின் மனித உரிமைகள் கட்டாயமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்த நபர் ஆங்கிலம் பேசும் திறன் உடையவரா இல்லையா என்பது இதற்குத் தடையாக இருக்க முடியாது என்றும் நோரிஸ் கூறினார். தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது, அங்கு துன்புறுத்தல் அல்லது கடுமையான ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில், அந்த நபரை அந்நாட்டிற்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கும் அனுப்பக்கூடாது என்பதே இந்த விதிகளின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

இதன் விளைவாக, “அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் இல்லை” என்ற நோரிஸின் கூற்று, ஆளுங்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பையும் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

மனைவி மற்றும் மகனைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவரை கைது செய்த ஜோகூர் காவல்துறை | Makkal Osai

Next Post

பிரித்தானியாவின் புதிய திட்டம்: குடும்பங்களின் மளிகைச் செலவு அதிகரிக்கும் அபாயம் – Sri Lanka Tamil News

Next Post
பிரித்தானியாவின் புதிய திட்டம்: குடும்பங்களின் மளிகைச் செலவு அதிகரிக்கும் அபாயம் – Sri Lanka Tamil News

பிரித்தானியாவின் புதிய திட்டம்: குடும்பங்களின் மளிகைச் செலவு அதிகரிக்கும் அபாயம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin