பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளதோடு, ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.


கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

