
Last Updated:
“4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் பரசுராம் கல்யாண வாரிய தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார்.
“4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்” என மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் பரசுராம் கல்யாண வாரிய தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பரசுராம் கல்யாண வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு, “குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு பரசுராம் கல்யாண வாரியத்தின் சார்பில் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் வாசிக்க: TM Krishna | பெரியார் பாடலை தொடர்ந்து பாடுவேன்…லுங்கி அணிவதால் என்ன தவறு? – இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டதால் மதவெறி பிடித்தவர்கள் அதிகமாகிவிட்டனர். எதிர்கால தலைமுறையினரின் பாதுகாப்பு கருதி இளைஞர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரியத்தின் தலைவராக நான் இல்லாவிட்டாலும் கூட உங்களுக்கான பரிசுத் தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
செலவுகளைக் கருத்தில் கொண்டு பலரும் குழந்தை பெறுவதை தவிர்க்கின்றனர். அதை எப்படியாவது சமாளித்துவிடுங்கள். ஆனால், குழந்தைகளை பெற்றெடுப்பதில் பின்வாங்காதீர்கள்” என பேசியுள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
January 14, 2025 7:53 AM IST

