• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி: நாளை அமெரிக்கா பயணம் | Prime Minister Modi went to France

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in இந்தியா
Reading Time: 8 mins read
0
பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி: நாளை அமெரிக்கா பயணம் | Prime Minister Modi went to France
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் சென்றார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று இரவு அவருக்கு விருந்து அளித்தார்.

பாரிஸில் இன்று நடைபெறும் 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் டிங் சூயெக்ஸியாங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள், ஓபன் ஏஐ உட்பட பல்வேறு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கிகளை வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை அமெரிக்கா பயணம்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் புறப்படுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அவர் நாளை மறுநாள் சந்திக்க உள்ளார். கனடா, மெக்ஸிகோ, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்து வருகிறார். ஆனால் இந்தியா மீது அவர் நேரடியாக கூடுதல் வரி விதிக்கவில்லை.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது. அமெரிக்காவின் மின்னணு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், அமெரிக்க பயணம் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக இந்த நாடுகள் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஆரம்பம் முதலே இந்தியாவுடன் பிரான்ஸ் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது.

கடந்த 1974-ம் ஆண்டில் முதல் அணு குண்டு சோதனையை இந்தியா நடத்தியது. இதற்கு பிரான்ஸ் பல்வேறு வகைகளில் உதவி செய்தது. அணு குண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் பிரான்ஸ் மட்டும் பக்கபலமாக இருந்தது. கடந்த 1978-ம் ஆண்டில் இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. அப்போது பிரான்ஸ் உதவிக் கரம் நீட்டியது. அந்த நாடு விநியோகித்த யுரேனியம் மூலமே தாராப்பூர் அணு மின் நிலையம் இயக்கப்பட்டது.

கடந்த 1998-ம் ஆண்டு இந்தியா 2-வது அணு குண்டு சோதனையை நடத்தியது. அப்போதும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் பிரான்ஸ் உறுதுணையாக இருந்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு தேவையான போர் விமானங்கள், ஆயுதங்களையும் வழங்கியது. ரஷ்யாவுக்கு அடுத்து பிரான்ஸிடம் இருந்தே இந்தியா அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்தபோது பிரான்ஸ் தனது வீட்டோ அதிகாரம் மூலம் அந்த தீர்மானத்தை முறியடித்தது. தற்போது பிரதமர் மோடி, அதிபர் இமானுவேல் மெக்ரான் சந்திப்பின்போது பாதுகாப்பு துறை சார்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். பல்வேறு நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். ஆனால் வர்த்தக பற்றாக்குறை இருந்தபோதிலும் இந்தியா மீது அவர் நேரடியாக கூடுதல் வரி விதிக்கவில்லை.

ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படும். போர் விமானங்களுக்கான இன்ஜின்களை இணைந்து தயாரிப்பது, ராணுவத்துக்கு தேவையான அதிநவீன கவச வாகனங்களை இணைந்து தயாரிப்பது குறித்து அதிபர் ட்ரம்பும் மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

நண்பர் ட்ரம்பை சந்திக்க ஆவல்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்ஸில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை ஏற்க உள்ளேன். இந்த மாநாட்டில் பாதுகாப்பான, நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்.

இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து அதிபர் மெக்ரானுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளேன். மார்சேயில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைக்கிறேன். உலகளாவிய நன்மைக்கான ஆற்றலைப் பயன்படுத்துவதற்காக பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்த கூட்டமைப்பின் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தை பார்வையிட உள்ளேன். முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மசார்குஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறேன்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின்பேரில் அமெரிக்காவிற்கு 2 நாள் பயணமாக செல்கிறேன். எனது நண்பர் ட்ரம்பை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது முதலாவது பதவிக் காலத்தில் இருந்து இருவரும் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்கிறேன்.

தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விநியோகச் சங்கிலி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த இந்த சந்திப்பு முக்கிய வாய்ப்பாக அமையும். இருநாடுகளின் மக்கள் நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். உலகத்துக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

இறக்குமதி வாகனங்களின் புதிய விலையை அறிவித்த நிறுவனம்

Next Post

IND vs ENG 3rd ODI: இந்தியா vs இங்கிலாந்து 3வது ஒரு நாள் கிரிக்கெட் இன்று.. எங்கே, எப்போது பார்ப்பது? விவரம் உள்ளே

Next Post
IND vs ENG 3rd ODI: இந்தியா vs இங்கிலாந்து 3வது ஒரு நாள் கிரிக்கெட் இன்று.. எங்கே, எப்போது பார்ப்பது? விவரம் உள்ளே

IND vs ENG 3rd ODI: இந்தியா vs இங்கிலாந்து 3வது ஒரு நாள் கிரிக்கெட் இன்று.. எங்கே, எப்போது பார்ப்பது? விவரம் உள்ளே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin