• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த முகேஷ் அம்பானி – நீடா அம்பானி… துவக்க விழாவை கண்டுகளித்தனர்… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 27, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த முகேஷ் அம்பானி – நீடா அம்பானி… துவக்க விழாவை கண்டுகளித்தனர்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானியும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இருவரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை சந்தித்தனர். 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினருமான நீடா அம்பானி ஆகியோர் நேரில் சந்தித்தனர். பாரிஸில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவையும் இருவரும் கண்டு களித்தனர்.

விளம்பரம்

உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நேற்று வண்ணமயான கொண்டாட்டத்துடன் பாரிஸில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் பாரீஸ் சென்றுள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக்கில் இந்தியா இல்லம் இந்த தொடரின்போதுதான் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி மேற்கொண்ட முயற்சிதான் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் நீடா அம்பானி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உதவியால் பல வீரர் வீராங்கனைகள் விளையாட்டுத்துறையில் சாதித்து வருகின்றனர்.

விளம்பரம்

 

International Olympic Committee (IOC) member Nita Ambani and Industrialist Mukesh Ambani at the opening ceremony of the Paris 2024 Olympics at the iconic Eiffel Tower. pic.twitter.com/0jD7tT974B

— ANI (@ANI) July 27, 2024

விளம்பரம்

இந்த நிலையில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவை நேரில் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து அவர்கள் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு முகேஷ் – நீடா அம்பானி தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

News18

முன்னதாக பாரிஸில் நடைபெற்ற 142 ஆவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்தியாவின் உறுப்பினராக போட்டியின்றி மீண்டும் நீடா அம்பானி தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க – டெல்லியில் இன்று 9வது நிதி ஆயோக் கூட்டம்.. பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது! – யாரெல்லாம் பங்கேற்கின்றனர்?

இதுகுறித்து பேட்டி அளித்த நீடா அம்பானி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கின் அங்கீகாரமாகும். ஒவ்வொரு இந்தியருடனும் மகிழ்ச்சி மற்றும் பெருமையின் இந்த தருணத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

.



Read More

Previous Post

இனி ATM கார்டு தேவையில்லை… ஸ்மார்ட் போன் மூலமே பணம் எடுக்கலாம்!

Next Post

Elementor #22798

Next Post
Elementor #22798

Elementor #22798

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin