சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வரவிருக்கும் முனையம் 5ல் (T5) புதிதாக MRT நிலையம் அமையவுள்ளது.
இது சாங்கி விமான நிலையம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை (TEL) மற்றும் குறுக்கு தீவுப் பாதை (CRL) ஆகிய பகுதிகளை இணைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று ஜூலை 25 வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முனையம் 5ல் (T5) புதிதாக MRT நிலையம்
இந்த புதிய MRT நிலையம், சாங்கி விமான நிலையத்திற்கும் சுங்கே பெடோக் நிலையத்திற்கும் இடையில் அமையவுள்ளது.
புதிய பாதையின் வரைபடம் இவ்வாறு இருக்கும்:

இந்தப் பாதையில் முனையம் 5 (T5) இணைவதால், பயணிகள் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் அங் மோ கியோவிற்கு நேரடியாக பயணிக்க முடியும்.
மேலும், இது பொங்கோல் டிஜிட்டல் வட்டம் மற்றும் ஜூரோங் லேக் வட்டம் போன்ற முக்கிய இடங்களை கடந்து செல்லும்.
இந்த விரிவாக்கத்துக்கு பிறகு சாங்கி விமான நிலையத்திற்கும் முக்கிய நகரத்திற்கும் இடையிலான பயண நேரம் குறையும் என்று LTA தெரிவித்துள்ளது.
சாங்கி முனையம் 5
அதே போல, சாங்கி முனையம் ஐந்தின் கட்டுமான பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் பயணிகள் இலகுவாக வந்து செல்லும் வகையில் உலகளாவிய முன்னணி விமான மையமாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Photo: Changi Airport Group
சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா: இந்து பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி… முக்கிய அறிவிப்புகள்