Last Updated:
பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக நாமல் ராஜபக்சே கூறினார்.
பிரபாகரனின் இளைய மகன் போரின்போது உயிரிழந்த தகவலை கேட்டு, தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக, இலங்கை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், போர் காலத்தில் அதிபராக இருந்த தங்கள் தந்தை மிகவும் கவலை அடைந்த சம்பவம் எதுவும் நினைவிருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்சே, “ஒன்று கெப்பிட்டிபொல சம்பவம், மற்றொன்று பிரபாகரனின் இளைய மகன் உயிரிழந்த தகவல் வந்தபோது தனது தந்தை மஹிந்த ராஜபக்சே கவலை அடைந்ததாக”க் கூறினார்.
“அந்த பிள்ளைகள் போரில் சம்பந்தப்படவில்லை என தனது தந்தை கருதியதாகவும், வேண்டுமென்றே இதனை செய்யவில்லை எனவும்” தெரிவித்தார். “அது ‘கிராஸ் பயரிங்’கின்போது நடந்த சம்பவம் எனவும், வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல” என்றும் விளக்கினார். போர் காலம் தொடர்பாக இவ்விரு சம்பவங்களே தனக்கு நினைவில் இருப்பதாகவும் கூறினார்.
February 09, 2025 8:02 PM IST


