இந்தியாவின் இரண்டு பெரிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி அமைத்துள்ளன.
ஐசிஐசிஐ வங்கி தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஜூலை 2, 2024 முதல் திருத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி சாதாரண பொதுமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.20 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வரையிலும் வட்டி விகிதம் வழங்குகிறது. .
இதற்கிடையில், ஆக்சிஸ் வங்கியும் ஜூலை 1, 2024 முதல் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி அமைத்துள்ளது. ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதங்கள் சாதாரண குடிமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வரையிலும் உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
15 முதல் 18 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.20 சதவீதம் வழங்கப்படுகிறது. 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு, தற்போது 7.2 சதவீதம் வரையில் வட்டி வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி. மேலும் ஓராண்டு வைப்புத்தொகைக்கு 6.7 சதவீத வட்டியை வழங்குகிறது.
மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு இப்போது ஆண்டுக்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நான்கு ஆண்டு மற்றும் ஐந்தாண்டு வைப்புத் தொகைகளுக்கு டெபாசிட்தாரர்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் தரப்படுகிறது.
இதற்கிடையில், குறுகிய கால வைப்புத் தொகைகளுக்கு (ஒரு வருடத்திற்கும் குறைவானது) டெபாசிட் காலத்தின் அடிப்படையில் 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் ரூ.3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு மட்டுமே பொருந்தும் .
இதையும் படிக்க:
Union Budget 2024: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இனிப்பான செய்தி… பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு?
ஆக்சிஸ் வங்கி
17 முதல் 18 மாதங்களுக்கு இடையில் உள்ள டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.2 சதவீத வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி வழங்குகிறது.
ஒரு வருடத்தில் முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளுக்கு 6.7 சதவீத வட்டியை டெபாசிட்தாரர்கள் பெறுவதற்கு உரிமை உண்டு. இரண்டு வருட டெபாசிட்டுகளுக்கு 7.10 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும். மூன்று மற்றும் நான்கு வருடங்களுக்கான நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது ஆக்சிஸ் வங்கி.
இதையும் படிக்க:
முதலீட்டு முடிவுகளை சுயமாக எடுக்கும் 72% பெண்கள்… ஆய்வில் புதிய தகவல்
இருப்பினும், டெபாசிட்தாரர்கள் தங்கள் ஐந்தாண்டு வைப்புத்தொகையில் ஆண்டுக்கு 7 சதவீதத்தைப் பெற உரிமை உண்டு. டெர்ம் டெபாசிட்டுகளின் அடிப்படையில் குறுகிய கால வட்டி விகிதங்கள் 3 முதல் 6 சதவீதம் வரை இருக்கும். உதாரணமாக, 7 முதல் 29 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 3 சதவீதமாகவும், 46 முதல் 60 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு சற்று அதிகமாக 4.25 சதவீதம் கிடைக்கிறது. 9 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் சாதாரண பொதுமக்களுக்கு 6 சதவீதம் ஆகும். இந்த வட்டி விகிதங்கள் யாவும் ரூ.5 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
