ஐதராபாத்தின் பிரபலமான பாரடைஸ் பிரியாணி கடையில் வாங்கப்பட்ட பிரியாணி பாக்ஸில் இருந்து எலி ஒன்று வெளியேறி ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இது உணவு சுகாதாரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ, பிரசாத்தின் ஐமேக்ஸ் திரையரங்கிற்கு அருகிலுள்ள பாரடைஸ் பிரியாணி கடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தேநீர் அருந்த வந்த வாடிக்கையாளர் ஒருவர், உணவக வளாகத்துக்குள் எலிகள் சுதந்திரமாக நடமாடுவதை கவனித்து, அதைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில், ஒரே நேரத்தில் இரண்டு எலிகள் சுவர் மற்றும் டேபிள்கள் மீது இயல்பாகச் சுற்றிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
அதிலிருந்து சில நிமிடங்களில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிரியாணி பெட்டியிலிருந்து, எலி ஒன்று வெளியே வருவதையும் காண முடிகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அதை தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். அவர் வீடியோ எடுக்கும் போது, ஊழியர் ஒருவர் அவரிடம் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்பதையும் கவனிக்க முடிகிறது.
வீடியோவில், எலிகள் பெரிதும் தெளிவாகக் காணப்பட்டாலும், “பாக்ஸில் எதுவும் இல்லை” என ஊழியர் ஒருவர் கூறியது மேலும் கோபத்தை தூண்டியிருக்கிறது.
1953 ஆம் ஆண்டில் தொடங்கிய பாரடைஸ் பிரியாணி, ஐதராபாத்தின் பிரபலமான உணவு அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ‘உலகின் விருப்பமான பிரியாணி’ என்ற விளம்பரத்தைக் கொண்டிருக்கும் இந்த பிராண்ட், இந்தியா முழுவதும் பல கிளைகளை நிர்வகித்து வருகிறது. எனினும், கடந்த சில ஆண்டுகளில் அதன் சுவை, பிரியாணியின் தரம் மற்றும் பராமரிப்பு குறைந்துவிட்டதாக உணவு பிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், இந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
PARADISE BIRYANI WITH A SIDE OF RATS!!
This shocking scene is from the “World’s Favourite” Paradise Biryani outlet next to Prasad’s IMAX, Hyderabad!
A customer who went to have chai there was shocked to see the place crawling with rats!
The employee can be heard questioning… pic.twitter.com/gdVzWYMmNC
— Revathi (@revathitweets) November 13, 2025
இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பயனர், “பாரடைஸ் பிரியாணியின் ஐமேக்ஸ் கிளையில் கழிவுநீர் துர்நாற்றம் வருகிறது. பல கிளைகளில் தரம் குன்றிவிட்டது” என்று பதிவிட்டார். மேலும், “அவர்களின் புகழ் சுவரில், எலிகளையும் சேர்த்து்க கொள்ளலாம்” என்று கேலியாக பதிவு செய்தார்.
இந்த வீடியோ வைரலான உடன் நெட்டிசன்கள் பலரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், “பாரடைஸ் பிராண்ட் எப்போதோ சாக்கடைக்கு இணையான நிலைக்கு சென்றுவிட்டது. இப்போது எலியைக் கண்டுபிடித்ததில் ஒரு வியப்பும் இல்லை.” என்றார். மற்றொருவர், “இதோ உண்மையிலேயே ‘ரட்டடூயில்’ படம் மாதிரி, சமையலறையில் ஒரு எலியும் சமையல் செய்கிறது போல!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
November 18, 2025 8:21 PM IST

