பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சஞ்சய் குப்தாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து காரில் புறப்பட்ட ஒரு பெண், புகைப்படக் கலைஞர்களை நோக்கித் தவறான முறையில் நடுவிரலை உயர்த்திக் காட்டியதுடன் முகத்தை மூடிக்கொண்டு சிரிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
காரில் இருந்த பெண் சஞ்சய் குப்தாவின் மகள் தான் எனக் குறிப்பிட்டுச் சிலர் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வரும் அதேவேளையில், காணொளியில் இருக்கும் பெண்ணின் முகவரி அல்லது அடையாளம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இச்சம்பவம் குறித்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஒருசாரார், சோகமான தருணத்தில் புகைப்படக் கலைஞர்களின் எல்லை மீறிய தொந்தரவு மற்றும் அத்துமீறலுக்கு எதிர்ப்புக் காட்டுவதில் தவறில்லை எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மற்றுமொரு தரப்பினர், துயரம் நிறைந்த சூழலில் புகைப்படக் கலைஞர்களை நோக்கிக் காரில் இருந்த பெண் நடந்துகொண்ட விதம் விசித்திரமாகவும் பொருத்தமற்றதாகவும் இருப்பதாகக் விமர்சித்துக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

