இந்தியாவில் பல தொழில்முனைவோர்கள் தங்கள் பயணத்தை எளிமையான பின்னணியில் இருந்து தொடங்கியே, இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக பீகார் மாநிலத்தில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக ருத்ரா பிஸ்கட் (Rudra Biscuits) திகழ்கிறது. பீகார் மாநிலத்தில் பிரிட்டானியா எந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ருத்ரா பிஸ்கட் நிறுவனமும் பிரபலமாக உள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ருத்ரா பிஸ்கட்களை சந்தோஷமாக உண்டு ருசித்து மகிழ்கின்றனர். இவ்வளவு புகழ்வாய்ந்த ருத்ரா பிஸ்கட்டின் தொடக்கக் காலம் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது.
பவன் குமார் குப்தா என்பவரால் ருத்ரா பிஸ்கட் தொடங்கப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக இவர் பணியாற்றிய அலுவலகத்தில் விடுப்பு எடுக்க அனுமதி கிடைக்காத கோபத்தில் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார் குப்தா. பெகுசராயிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பக்ரி நகர் பரிஷத் பகுதியில் உள்ள தர்ஹா கிராமத்தில் வசிக்கும் லால்பாபு பிரஹாத்தின் மகன் தான் குப்தா.
இவர் 18 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இண்டீரியர் டிஸைனராக பணியாற்றி வந்தார். இந்த வேலையில் அவருக்கு நல்ல சம்பளம் கிடைத்தபோதும், அவர் பதவியில் இருந்த காலத்தில் போதிய விடுமுறை கிடைக்கவில்லை. 2023ம் அண்டு இவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் பணியாற்றும் நிறுவனமோ விடுப்பு கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் கோபம் கொண்ட குப்தா, வேலையை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தன்னுடைய சொந்த கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தார்.
இதையும் படிக்க:
அலர்ட்! ஜூலை 13 அன்று UPI சேவைகள் தற்காலிக நிறுத்தம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வங்கி!
இவர் வேலை பார்த்த அலுவலகத்திற்கு அருகில் ஒரு பிஸ்கட் நிறுவனம் இருந்ததையும், அந்த தொழிற்சாலையில் பிஸ்கட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் அவர் அடிக்கடி பார்த்துள்ளார். நாம் ஏன் ஒரு பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கக்கூடாது என்ற யோசனை குப்தாவிற்கு இதன் மூலமே கிடைத்துள்ளது. இந்த பிஸ்கட் வியாபாரம் ஒரு நல்ல வருமான ஆதாரமாக மாறும் என்பதை அவர் தெரிந்தே வைத்திருந்தார். ஆகையால் மிகுந்த நம்பிக்கையோடு தனது கிராமத்தில் பிஸ்கட் ஆலையை தொடங்க முடிவு செய்தார். இதற்கிடையில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தால் நடத்தப்படும் PMFME திட்டத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் நிதியுதவியும் பெற்றார் குப்தா.
இதையும் படிக்க:
20 ஆண்டுகளுக்கு பின் ரூ.50 ஆயிரத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் தெரியுமா..? ஷாக் கொடுக்கும் தகவல்!
தற்போது இந்த ஆலையில் 12 தொழிற்சாலை ஊழியர்கள் பணியாற்றுவதாக தொழிற்சாலை மேலாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த ஆலையிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட், பன்கள், பிஸ்கட்கள் மற்றும் ரஸ்க் யாவும் ஒவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் அளவிற்கு பெகுசராய், ககாரியா, சமஸ்திபூர் மற்றும் பாட்னா மாவட்டங்களில் விற்பனையாகின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
