“டீப் சீக்’ – ஏ.ஐ உலகில் கோலோச்சி கொண்டிருந்த அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா ஆப் இது. ஏ.ஐ-யின் பிற தொழில்நுட்பங்களை விட, குறைந்த விலைக்கு கட்டமைக்கப்பட்ட இந்த ஆப் உலகம் முழுவதும் பெரிதாக வரவேற்கப்பட்டது. காரணம், இதன் துல்லியமான மற்றும் எளிமையான பதில்கள்.
அமெரிக்க உட்பட உலகமெங்கிலும் இந்த ஆப் மிகவும் பிரபலமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இதை விட குறைந்த விலைக்கு, சிறந்த ஏ.ஐ ஆப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பேசினார். ஆக, இந்த ஆப் தற்போது சீனாவில் ஒரு புதையல் போல பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் இந்த ஆப் இப்படி பாசிட்டிவாக போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், இந்த ஆப்பை வடிவமைத்த டாப் இன்ஜினீயர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஆம், இந்த ஆப்பை வடிவமைத்த டாப் இன்ஜினீயர்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது சீன அரசு. மேலும், அவர்களது பாஸ்போர்ட்டுகளை கையகப்படுத்தியுள்ளது. டீப் சீக் தொழில்நுட்பத்தை வடிவமைத்த இன்ஜினீயர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால், அவர்கள் மூலம் வணிக மற்றும் அரசின் முக்கிய ரகசியங்கள் கசியலாம். அதனால் தான், இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.