அம்பாறை – நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் காவல்துறையால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி
விழுந்த குறித்த உத்தியோகத்தர் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
நிந்தவூர் காவல்துறை
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர்
காவல்துறை நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, நேற்று(18) மாலை வாக்குமூலம் ஒன்றைப்
பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் காவல்
நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணைகளின் பின்னர் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென
மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு
அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்குப் பெண்
பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன்,
நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

