Last Updated:
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது 2014ஆம் ஆண்டு மோடி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நபர்களுக்கு அதிலும் குறிப்பாக ஏழ்மையான பின்னணிகள் கொண்ட நபர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம்.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்பது 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்கள் தங்களுடைய KYC விவரங்களை மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதனை செய்யாவிட்டால் உங்களுடைய அக்கவுண்டுகள் முடக்கப்படலாம் அல்லது பலன்கள் டிரான்ஸ்ஃபர் செய்வது ரத்து செய்யப்படலாம் மற்றும் டிரான்ஸ்ஃபர் செய்த பணத்தை உங்களால் பயன்படுத்த முடியாத நிலை போன்ற மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். உங்களுடைய மறு-KYC நிறைவு செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் வங்கிக்கு சென்று KYC படிவத்தை நிரப்ப வேண்டும்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்பது 2014ஆம் ஆண்டு மோடி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நபர்களுக்கு அதிலும் குறிப்பாக ஏழ்மையான பின்னணிகள் கொண்ட நபர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டம். எனினும், இந்த அக்கவுண்டுகள் சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கு அக்கவுண்ட் ஹோல்டர்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வகுத்துள்ள நோ யுவர் கஸ்டமர் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இதில் வழக்கமான முறையில் மறு-KYC செய்வது அவசியம்.
அக்கவுண்டானது தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைக்காமல் இருந்தாலோ அல்லது புதிய முகவரி, மொபைல் நம்பர் போன்ற தனிநபர் விவரங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலோ மறு-KYC செய்து அதனை வெரிஃபை செய்வது அவசியம். மறு-KYC செயல்முறை மூலமாக வங்கிகள் அவர்களுடைய ஆண்டுவாரியான சோதனைகளை சரியாக செய்வதற்கும் இது உதவுகிறது.
மறு-KYC செய்வதற்கான நினைவூட்டல்கள் என்பது SMS, இமெயில் அல்லது தபால் மூலமாக அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒருவேளை இந்த சரிபார்ப்பு முறைகளை செய்ய அக்கவுண்ட் ஹோல்டர்கள் தவறிவிட்டால் அக்கவுண்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். இதன் மூலமாக அக்கவுண்ட் ஹோல்டர்களால் பணத்தை வித்டிரா செய்ய முடியாது அல்லது மானியங்களை பெற முடியாது.
மறு-KYCஐ பூர்த்தி செய்வதற்கு பின்வரும் படிகளை பின்பற்றுங்கள்:
- உங்களுக்கு ஜன்தன் அக்கவுண்ட் இருக்கக்கூடிய வங்கிக் கிளைக்கு செல்லுங்கள். ஒருவேளை நேரடியாக உங்களால் அங்கு செல்ல முடியாவிட்டால் வீட்டு வாசலில் கிடைக்கும் சேவை, மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலமாக கிடைக்கும் டிஜிட்டல் Re-KYC அல்லது e-KYC போன்ற ஆப்ஷன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- உங்களிடம் சரியான ஐடி மற்றும் முகவரி நிரூபணத்திற்கான அசல் மற்றும் நகல் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, PAN கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, வாடகை ஒப்பந்தங்கள், தண்ணீர், கேஸ், மின்சாரம் போன்ற ரசீதுகள் அல்லது முகவரியை நிரூபிக்கும் வகையில் அரசு வழங்கிய வேறு ஏதேனும் ஆவணம்.
சமீபத்திய தொடர்பு விவரம் மற்றும் தனிநபர் தகவல்களுடன் KYC படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
வங்கிகள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு உங்களுடைய அக்கவுண்ட் விவரங்கள் ஒரு சில வேலை நாட்களுக்குள் அப்டேட் செய்யப்படும்.
August 27, 2025 4:50 PM IST


