• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா… தகுதி வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த விரிவான தகவல்கள்…

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா… தகுதி வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த விரிவான தகவல்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பட்டியலிடப்பட்ட பிரிவுகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் பொருந்தும். PMAY வெப்சைட்டில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தரவின் அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 92.61 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம்: தகுதி வரம்பு

தங்குவதற்கு சரியான வீடு இல்லாத 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள் மற்றும் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் பெறக்கூடிய நபர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள். மேலும், 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறக்கூடிய, தங்குவதற்கு சரியான வீடு இல்லாத குடும்பங்களும் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். கூடுதலாக சேரி அல்லது குடிசைப் பகுதியில் இருப்பவர்களும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம்: தகுதி வரம்பு

தங்குவதற்கு வீடு இல்லாத அல்லது குடிசையில் வாழக்கூடிய SECC தரவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தில் தகுதி பெறுகிறார்கள். எனினும், ஒரு சில பிரிவுகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியாது. தங்குவதற்கு நல்ல வீடு, மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர் அல்லது விவசாய உபகரணம் வைத்திருப்பவர்கள் அல்லது 50,000 அல்லது அதற்கும் அதிகமான உச்சவரம்பு கொண்ட ஒரு கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பிரிட்ஜ், லேண்ட்லைன் அல்லது பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம்: தேவையான ஆவணங்கள்

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும். விண்ணப்பிப்பவர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், வருமானத்திற்கான நிரூபணம், நில உரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம்: தேவையான ஆவணங்கள்

இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் பல்வேறு ஆவணங்களை வழங்க வேண்டும். அதில் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், ஸ்வச் பாரத் மிஷன் (SHM) நம்பர் மற்றும் MGNREGA வேலை அட்டை போன்றவை அடங்கும். கூடுதலாக தங்குவதற்கு சரியான வீடு இல்லை என்பதற்கான ஒரு ஆவணமும் தேவைப்படும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் ஆன்லைன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ PMAY-U 2.0 வெப்சைட்டுக்கு சென்று ஹோம் பேஜில் உள்ள ‘அப்ளை ஃபார் PMAY-U 2.0’ பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு ‘கிளிக் டு ப்ரோசீட்’ என்பதை தட்டவும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்துவிட்டு, ‘ப்ரொசீடு’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • தகுதி வரம்பு படிவத்தை நிரப்பி ‘எலிஜிபிலிட்டி செக்’ என்பதை தட்டவும்.
  • உங்களுடைய ஆதார் நம்பரை என்டர் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP மூலமாக அதனை சரிபார்க்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து கேப்சா கோடை என்டர் செய்தபின் ‘சேவ்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • இந்த படிவத்தை எதிர்கால தேவைக்காக நீங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

  • உங்களுடைய தனி நபர் விவரங்களை நிரப்பி ஒப்புதல் படிவத்தை அப்லோட் செய்து ‘சர்ச்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • இதில் உங்களுடைய பெயரை தேர்வு செய்து ‘செலக்ட் டு ரெஜிஸ்டர்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • பயன் பெறுவோர் விவரங்கள் ஆட்டோமேட்டிக்காக நிரப்பப்படும். அடுத்ததாக உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்கள் ஆகியவற்றை என்டர் செய்யுங்கள்.
  • உங்களுடைய பதிவு செயல்முறையை நிறைவு செய்ய இந்த விண்ணப்பத்தின் இறுதிப் பிரிவை நியமிக்கப்பட்ட அதிகாரி பூர்த்தி செய்வார்.
  • தமிழ் செய்திகள்/வணிகம்/

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா… தகுதி வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த விரிவான தகவல்கள்…

    Read More

    Previous Post

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணியில் ஷாஹீன், அசாம், முகமது ரிஸ்வான் நீக்கம்

    Next Post

    46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான பிரதிநிதிகளை வரவேற்க MAHB தயாராக உள்ளது | Makkal Osai

    Next Post
    46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான பிரதிநிதிகளை வரவேற்க MAHB தயாராக உள்ளது | Makkal Osai

    46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான பிரதிநிதிகளை வரவேற்க MAHB தயாராக உள்ளது | Makkal Osai

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin