3 ஆவது முறை பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டு கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில், நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
18வது மக்களவைத் தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது. பிரதமர் மோடி இன்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார்.
“இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் அமைச்சரவை கூட்டத்தில் இன்று மாலை பங்கேற்கிறார். இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்களுக்கான இலாகா குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:
மக்களவை சபாநாயகராக ஆந்திராவைச் சேர்ந்த பாஜக பெண் எம்பி நியமனம்?
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும். அதில் இரு அவைகளிலும் பிரதமர் மோடி தனது அரசின் நோக்கம் மற்றும் முன்னுரிமை கொடுக்க உள்ள விவகாரங்களை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
