இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, பூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய் , இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார்.
பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி, பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களையும் கண்டு மகிழ்ந்தார்.
#WATCH | Paro, Bhutan | A warm embrace between Bharat and Bhutan: Bhutan’s PM Tshering Tobgay welcomes PM Modi as he lands at Paro airport. pic.twitter.com/tKYHIgEsQc
— ANI (@ANI) March 22, 2024
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி பூடான் விமான நிலையத்தில் மலர்கள் மற்றும் வண்ணக் கோலங்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவு கடந்த 1968ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. பூடான் நாட்டு மன்னரும் அடிக்கடி இந்தியா வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பூடானுக்கு சென்ற மோடி, அந்நாட்டுடனான உறவை மேம்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இதையடுத்து இந்த மாதம் , பூடான் பிரதமர் இந்தியாவுக்கு வந்திருந்தார். மேலும் அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு சென்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திட இருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பள்ளி சிறுவர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை அந்நாட்டு அரசு செய்திருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…