Last Updated:
பிரதமர் மோடியை அமர வைத்து ஜோர்டான் இளவரசர் காரை ஓட்டிச் சென்றார்.
ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் அம்மானில் அந்நாட்டின் இளவரசர் அல் ஹூசைன் பின் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்கள் அருங்காட்சியகத்திற்கு புறப்பட்டபோது, பிரதமர் மோடியை அமர வைத்து இளவரசர் அல் ஹூசைன் காரை ஓட்டிச் சென்றார்.
முன்னதாக, அம்மானில் நடைபெற்ற இந்தியா – ஜோர்டான் தொழில் கூட்டமைப்புக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, பெட்ரா மற்றும் எல்லோரா நகரங்களுக்கு இடையே கல்வி மற்றும் சுற்றுலாவை பலப்படுத்துதல் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
في الطريق إلى متحف الأردن برفقة صاحب السمو الملكي ولي العهد الأمير الحسين بن عبدالله الثاني pic.twitter.com/Kj5I2xuBFG
— Narendra Modi (@narendramodi) December 16, 2025
அப்போது பேசிய பிரதமர் மோடி, நம்பிக்கையான வர்த்தகமே தற்போதைய உலகத்தின் தேவை என குறிப்பிட்டார். பிறகு உரையாற்றிய ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஜோர்டானில் இருந்து, எத்தியோப்பியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, விமான நிலையத்திற்குச் சென்று ஜோர்டான் இளவரசர் வழியனுப்பி வைத்தார்.
December 16, 2025 6:13 PM IST


