Last Updated:
எத்தியோப்பியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டது. இந்திய நிறுவனங்கள் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்து 75 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கின.
பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி எத்தியோப்பிய நாட்டு அரசு கவுரவித்துள்ளது.
எத்தியோப்பியாவில் இருப்பதை குஜராத்தில் உள்ளது போல் உணர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக எத்தியோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிங்கங்களின் பிரதேசமான எத்தியோப்பியாவில் இருப்பதை தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பது போல் உணர்வதாக தெர்வித்தார்.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு, இணைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவும் – எத்தியோப்பியாவும் இயற்கையான கூட்டாளிகளாக இருப்பதாக பிரதமர் கூறினார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய வணிகர்கள் கடல் கடந்து எத்தியோப்பியா வந்து தங்கம், மூலிகை பொருட்களை வணிகம் செய்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தற்போது இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்து 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறினார்.
வந்தே மாதரம் பாடலை கலைஞர்கள் பாடியதை கைகளை தட்டி ஆரவாரத்துடன் பிரதமர் மோடி கண்டு களித்தார்.
December 17, 2025 8:44 PM IST


