• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம்: “திமுக அரசு வீடு கட்டுமானத்தில் ஆர்வம் காட்டவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 27, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம்: “திமுக அரசு வீடு கட்டுமானத்தில் ஆர்வம் காட்டவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 27, 2026 9:29 PM IST

News18 Rising Bharat Summit | இந்தியா டிஜிட்டல் பொது கட்டமைப்பால் உலகளாவிய முன்னணியில், வந்தே பாரத் ரயில்கள், Direct Benefit Transfer, புதிய பாராளுமன்றம், Millenials மற்றும் Gen Z வாக்குகள், காங்கிரஸ் எதிர்ப்பு.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் திமுக அரசு இந்த வீடுகளின் கட்டுமானத்தில் ஆர்வம் காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

இந்தியாவுக்கென உலகளாவிய அடையாளம் உருவாகி வரும் நிலையில், ‘வலிமை உள்ளிருந்து’ (Strength Within) எனும் கருப்பொருளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறை வல்லுநர்கள் விவாதிக்கும் ‘ரைசிங் பாரத் மாநாடு 2026’ நியூஸ்18 சார்பில் டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சர்வதேச அளவில் நாட்டின் உயர்ந்து வரும் அந்தஸ்து குறித்து பிரதமர் மோடி பேசினார்.

மாநாட்டில் அவர் பேசுகையில், “இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய தன்னம்பிக்கை காரணமாக பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்வதற்கு முன் வந்துள்ளனர். 2014 முன்பு வரை மூன்று கோடி குடும்பங்கள் இருளில் மூழ்கி இருந்தன. தற்போது இந்தியாவை வளர்ச்சி என்ஜினாக மாற்றி உள்ளோம். உலகின் முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் ஏடிஎம் கூட மிகவும் தாமதமாக வந்த நாடு இந்தியா, ஆனால் தற்போது அதே இந்தியா டிஜிட்டல் கட்டண முறையில் உலகளாவிய முன்னணியை எப்படி பெற்றது?. இன்று டிபிடி (Direct Benefit Transfer) மூலம் இருபத்து நான்கு டிரில்லியன் ரூபாய் தொகையை பயனாளிகளுக்கு எப்படி அனுப்ப முடிகிறது?

இதற்குப் பின்னால் உள்ள சக்தி – இந்தியாவின் டிஜிட்டல் பொது கட்டமைப்பு. அப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அந்த இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடாக எப்படி மாறியது?. ஒருகாலத்தில் தாமதம் மற்றும் மெதுவான வேகம் என்பதற்காகவே இந்திய ரயில்வே அறியப்பட்ட நிலையில், இன்று வந்தே பாரத், நமோ பாரத் போன்ற அதிவேக (Semi High-Speed) ரயில் இணைப்புகள் எப்படி சாத்தியமாகின்றன?.

நாட்டின் மிகப் பழமையான கட்சி, நாட்டின் AI மாநாட்டை களங்கப்படுத்த முயற்சி செய்துள்ளது. வெளிநாட்டு விருந்தினர்களின் முன்னிலையில், காங்கிரஸ் வெறும் ஆடைகளை மட்டும் கழற்றவில்லை. தங்களின் சிந்தனை திவாலானத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. தோல்வியால் ஏற்பட்ட விரக்தி, ஏமாற்றம் மனதில் நிரம்பியிருக்கும்போது, அகம்பாவம் மேலெழும்பும் போது, நாட்டை அவமதிக்கும் இப்படிப்பட்ட எண்ணங்கள் வெளிப்படுகின்றன. காங்கிரஸின் இந்த செயல் நாட்டில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தங்களின் தவறை நியாயப்படுத்துவதற்காக மகாத்மா காந்தி பெயரை முன்னிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் எப்போதும் இப்படித்தான் செய்கிறது. தங்களின் பாவத்தை மறைக்க வேண்டும் என்றால் காந்தியை முன்னிறுத்தும்; தங்களின் புகழைப் பாட வேண்டும் என்றால் ஒரே குடும்பத்திற்கே முழு கீர்த்தியும் வழங்கும்.

இப்போது, காங்கிரஸ் ideology என்ற பெயரில் வெறும் எதிர்ப்பு கருவியாக மட்டுமே மாறியுள்ளது. காங்கிரஸின் நோக்கம் எதையும் எதிர்ப்பதே ஆகும். என்னிடம் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கும் எதிர்ப்பு. பாராளுமன்றத்தின் மேல் அமைக்கப்பட்ட அசோக சின்னத்தின் சிங்கங்களுக்கும் எதிர்ப்பு. பொதுமக்களின் செருப்புகளை பார்த்து ஓடியவர்களுக்கு, பாராளுமன்ற சிங்கங்களின் பற்களை பார்த்ததும் பயம் ஏற்பட்டது.

Kartavya Bhavan உருவாக்கப்பட்டது. அதற்கும் எதிர்ப்பு. பாதுகாப்புப் படையினர் surgical ஸ்ட்ரைக் நடத்தினர். அதற்கும் எதிர்ப்பு. பாலாகோட்டில் வான்வழி தாக்குதல் நடந்தது. அதற்கும் எதிர்ப்பு. ஆபரேஷன் சிந்தூர் நடந்தது. அதற்கும் எதிர்ப்பு. நாட்டின் ஒவ்வொரு சாதனையிலும் காங்கிரஸின் ‘டூல்கிட்’ இலிருந்து வெளிவரும் ஒரே விஷயம் – எதிர்ப்பு மட்டுமே. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு குடும்பத்தின் குமாஸ்தாவாக உள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் வாக்குகள் உயர உயர காங்கிரசின் வாக்குகள் குறைந்துள்ளது. முதலில் Millenials காங்கிரசை வெறுத்தார்கள் தற்போது Gen Z இளைஞர்களும் காங்கிரஸ் கட்சிக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளனர்.

நல்ல நோக்கம்நேர்மையான மனப்பான்மை வேண்டும். காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இதில் கூட தோல்வியடைந்துள்ளன. அவர்கள் ஒருபோதும் நல்ல நோக்கத்துடன் செயல்படவில்லை. ஏழைகளின் துயரம், அவர்களின் வேதனை குறித்து இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. மேற்கு வங்கத்தில் இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நல்ல நோக்கம் இருந்திருந்தால், ஏழைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வழங்கும் இந்த திட்டத்தை அங்கே தடுக்கப்பட்டிருக்குமா? இல்லை. நாட்டில் பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கான நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. Network 18 பார்வையாளர்களுக்கு இன்னொரு புள்ளிவிவரத்தை நான் கூறுகிறேன். தமிழ்நாட்டின் ஏழை குடும்பங்களுக்காக சுமார் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் மூன்று லட்சம் வீடுகளின் கட்டுமானம் நின்றுவிட்டது. ஏன்? ஏனெனில் திமுக அரசு இந்த வீடுகளின் கட்டுமானத்தில் ஆர்வம் காட்டவில்லை.” என்று பேசினார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம்: “திமுக அரசு வீடு கட்டுமானத்தில் ஆர்வம் காட்டவில்லை” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Read More

Previous Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு வெற்றியிலக்கு 160 ஓட்டங்கள்

Next Post

வேட்புமனு தாக்கல் இன்று இரவுடன் நிறைவு – Malaysiakini

Next Post

வேட்புமனு தாக்கல் இன்று இரவுடன் நிறைவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin