• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரதமர் அம்பானி.. டிவிட்டரில் எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி சேர்ந்து நடத்திய நாடகம்! மோடி அரசுக்கு நெருக்கடியா? | “Prime Minister Ambani” & Starlink Clash: Is Elon Musk and Mukesh Ambani’s Twitter Drama a Staged Play to Pressure Modi?

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பிரதமர் அம்பானி.. டிவிட்டரில் எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி சேர்ந்து நடத்திய நாடகம்! மோடி அரசுக்கு நெருக்கடியா? | “Prime Minister Ambani” & Starlink Clash: Is Elon Musk and Mukesh Ambani’s Twitter Drama a Staged Play to Pressure Modi?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் அம்பானி.. டிவிட்டரில் எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி சேர்ந்து நடத்திய நாடகம்! மோடி அரசுக்கு நெருக்கடியா?

எலான் மஸ்க் சமீபத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் வருவதற்கு ஒரு எண்ணெய் நிறுவனத்தின் முதலாளி முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும், பின்பு முகேஷ் அம்பானியை இந்தியாவின் பிரதமர் என அழைத்தும்.. முகேஷ் அம்பானி நேரடியாக ஸ்டார்லிங்க் இந்தியாவுக்கு வருவதைத் தான் வரவேற்பதாகக் கூறியதும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி பேசுபொருளானது.

இந்த நிலையில் அவை அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம் எனக் கருத்து நிலவி வருகிறது. வேண்டுமென்ற முகேஷ் அம்பானியும், எலான் மஸ்க்-ம் இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையைக் கொண்டு வர வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் சமூகவலைத்தளத்தில் இத்தகைய கருத்துக்களைப் பதிவிட்டு வருவதாகச் சமுக வலைத்தளத்தில் பதிவுகள் அனல் பறக்கிறது.

பிரதமர் அம்பானி.. டிவிட்டரில் எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி சேர்ந்து நடத்திய நாடகம்! மோடி அரசுக்கு நெருக்கடியா?

மத்திய அரசு ஜியோ, ஸ்பேஸ்எக்ஸ், ஏர்டெல் என யாருக்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையை வழங்க அனுமதிக்காத நிலையில் எதற்காக இத்தகைய சமூகவலைத்தளத்தில் கருத்து மோதல்கள் வருகிறது என்பதை ஆதர்ஷ் ஆர்பி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான ஆதார்.ஸ்பீக்கஸ் மூலம் பதிவிட்டு உள்ளார்.

உண்மையில் எலான் மஸ்கும், முகேஷ் அம்பானியும் பார்ட்னர்ஸ் எனத் துவங்கும் இந்த வீடியோவில் அடுக்கடுக்கான பல விஷயங்களை முன்வைத்துள்ளார்.

மார்ச் 2025ல் ரிலையன்ஸ் ஜியோவும், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது ஸ்டார்லிங்க் சேவை அளிப்பது, கட்டணத்தை வசூலிப்பது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என அனைத்தும் ஸ்பேஸ்எக்ஸ் இந்தியா நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.

ஆனால் ஸ்டார்லிங்க் சேவைக்கான கருவிகளை வாங்கி வைத்து, அதை இந்தியா முழுவதும் விநியோகம் செய்து, ஒவ்வொரு வாடிக்கையாளர் வீட்டிலும் இன்ஸ்டால் செய்து, இணைப்பை ஆக்டிவேட் செய்யும் மாபெரும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் இருவரும் போட்டியாளர்கள் இல்லை, பார்ட்னர்ஸ்.

இனிதான் கதை ஆரம்பமாகிறது, 2025 ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும்.. மக்கள் மத்தியில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இண்டர்நெட் சேவை வழங்குவதில் எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி போட்டியாளர்கள் என்பது தான் எல்லோருக்கும் தெரியும்…

இப்படியிருக்கையில் தான், அக்டோபர் 7ஆம் தேதி இந்தியாவில் ஸ்டார்லிங்க் வருவதை ஒரு எண்ணெய் வள தொழிலதிபர் முடக்குகிறார் என எலான் மஸ்க் கூறுகிறார், அடுத்த பிரதமர் அம்பானி என அடுத்தடுத்து டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

வெறும் ஒரு வார இடைவெளியில் அமெரிக்க அரசு, அந்நாட்டின் அரசு செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மார்கோ ரூபியோ இந்தியா வருவதாக அறிவிக்கிறது. இந்தியாவுக்கு முதல் முறையாக வரும் மார்கோ ரூபியோ டெல்லிக்கு செல்லாமல் மும்பைக்கு அதன் பின்பு ஜாம்நகருக்கு செல்கிறார். குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் என்பது முகேஷ் அம்பானியின் கோட்டை.

இதன் மூலம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரி இந்திய அரசிடம் செல்லாமல் இந்திய கார்ப்ரேட் நிறுவனத் தலைவரிடம் செல்வது என்பது கட்டாயம் இரு வேறுபட்ட விஷயமல்ல. இரண்டுக்கும் பெரும் தொடர்பு உள்ளது என ஆதர்ஷ் ஆர்பி சிங் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஸ்டார்லிங்க் மட்டும் அல்லாமல் ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தின் சேவைகளையும் பல வருடமாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எலான் மஸ்க் தனியாக மத்திய அரசிடம் அனுமதிக்காகப் போராடினால் மத்திய அரசு எளிதாக மறுக்க முடியும்.

முகேஷ் அம்பானியும் தனது ஜியோ சேவைக்காகப் பொதுவெளியில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவோ அல்லது அரசுக்கு பொதுவெளியில் நெருக்கடி கொடுக்கவோ முடியாது என்பதால்… எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி திட்டமிட்டு இந்த நாடகத்தை டிவிட்டரில் உருவாக்கியுள்ளனர் என ஆதர்ஷ் ஆர்பி சிங் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி இருவரும் இணைந்து உருவாக்கிய திட்டத்தின் படி எலான் மஸ்க் வெளிப்படையாக மக்கள் மத்தியில் இந்திய அரசு அம்பானி மூலம் தான் இயங்குகிறது என கூறுவது மூலம்…

ஸ்டார்லிங்க் சேவைக்கு ஒப்புதல் அளிக்காத ஒவ்வொரு நாளும், அம்பானி தான் ஸ்டார்லிங்க் சேவை வருவதை முடக்கி, இந்திய அரசை கட்டுப்படுத்தி வருகிறார் என்ற எலான் மஸ்க்-ன் கருத்து உண்மையாகும் பிம்பம் உருவாகும்.

இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அம்பானியால் அரசு நடக்கவில்லை என்பதை நிரூபணம் செய்ய இருக்கும் ஒரே வழி ஸ்டார்லிங்க் சேவைக்கு ஒப்புதல் அளிப்பது தான்.

அப்படி ஸ்டார்லிங்க் சேவைக்கு ஒப்புதல் அளித்தால் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அம்பானிக்குத் தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவையும் அளிக்க முடியும், இதேபோல் 2025 ஒப்பந்தம் மூலம் ஸ்டார்லிங்க் சேவை வாயிலாகவும் வருமானத்தைப் பெற முடியும்.

இவை அனைத்தும் ஜியோ பிளாட்பார்மஸ்-ன் 108 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு முன்பு நடக்கும் காரணத்தால் கூடுதல் பிரபலமாகும் என ஆதர்ஷ் ஆர்பி சிங் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு சுமார் 20000 அதிகமான லைக்குகள், 1150 ஷேர், 200க்கும் அதிகமான கமெண்ட்-கள் வந்துள்ளது.

மார்கோ ரூபியோ இந்தியப் பயணம்

மார்கோ ரூபியோ இன்று மதியம் 2 மணிக்கு மும்பை வருகிறார், 4 மணிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாஜ் ஹோட்டலில் சந்தித்து இந்தியா – அமெரிக்கா மத்தியிலான நட்புறவு குறித்துப் பேசுகிறார். இதன் பின்பு மாலை ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்தியா – அமெரிக்கா மத்தியிலான நட்புறவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் 250வது சுதந்திரத்தைக் கொண்டாட Freedom 250 Reception என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

இதன் பின்பு நாளை அக்டோபர் 21 ஆம் தேதி குஜராத் ஜாம் நகருக்கு சென்று முகேஷ் அம்பானி உட்பட பல வர்த்தக தலைவர்களைச் சந்தித்து எனர்ஜி மற்றும் கமர்சியல் முதலீடுகள் குறித்து பேச உள்ளார். நாளை முழுவதும் குஜராத்தில் தான் மார்கோ ரூபியோ இருக்கப் போகிறார்.

Share This Article

English summary

“Prime Minister Ambani” & Starlink Clash: Is Elon Musk and Mukesh Ambani’s Twitter Drama a Staged Play to Pressure Modi?

“Prime Minister Ambani” & Starlink Clash: Is Elon Musk and Mukesh Ambani’s Twitter Drama a Staged Play to Pressure Modi? — பிரதமர் அம்பானி.. டிவிட்டரில் எலான் மஸ்க் – முகேஷ் அம்பானி சேர்ந்து நடத்திய நாடகம்.. மோடி அரசுக்கு நெருக்கடியா?

Story first published: Tuesday, October 20, 2026, 13:53 [IST]

Other articles published on Oct 20, 2026

Read More

Previous Post

பாரா ஆசிய விளையாட்டில் வென்ற ஜே.டி.மதனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் விஜய் அறிவிப்பு | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post

பெரிக்காத்தான் பதிவு ரத்துசெய்யப்பட்டது

Next Post

பெரிக்காத்தான் பதிவு ரத்துசெய்யப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin