• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரதமரே இதோடு நிறுத்தாதீங்க.. பஹல்காம் தாக்குதலில் மரணித்த கடற்படை அதிகாரியின் மனைவி உருக்கமான வேண்டுகோள்.

GenevaTimes by GenevaTimes
May 8, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பிரதமரே இதோடு நிறுத்தாதீங்க.. பஹல்காம் தாக்குதலில் மரணித்த கடற்படை அதிகாரியின் மனைவி உருக்கமான வேண்டுகோள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் கதிகலங்கி போயுள்ளது. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இந்த தாக்குதலை நிறுத்த கூடாது என்பது பஹல்காம் தாக்குதலில் கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் விஜய் நார்வாலை பறிகொடுத்த நிலையில் அவரது மனைவி ஹிமான்ஷி நார்வால் பிரதமர் மோடியிடம் முக்கிய டிமாண்ட் வைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இன்று நம் நாட்டின் சார்பில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் 10 குடும்ப உறுப்பினர்கள் இறந்துள்ளனர். இந்த தாக்குதல் என்பது முப்படைகளையும்ஒருங்கிணைத்து நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தன. 4 இடங்களில் பாகிஸ்தானில் இருந்தன. மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் கதிகலங்கி போய் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடியை நம் நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் மக்கள் மாற்றி மாற்றி இனிப்பு வழங்கினர். இந்நிலையில் தான் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரும், கடற்படை அதிகாரியுமான லெப்டினன்ட் வினய் நார்வால் இறந்தார். தற்போது அவரது மனைவி ஹிமான்ஷி நார்வால் பிரதமர் மோடிக்கு முக்கிய டிமாண்ட்டை வைத்துள்ளார்.

இதுபற்றி ஹிமான்ஷி நார்வால் கூறுகையில், ‛‛ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். என் கணவர் பாதுகாப்பு படையில் பணியாற்றினார். அவர் நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று விரும்பினார். நாட்டில் வெறுப்புணர்வு மற்றும் பயங்கரவாதம் ஆகியவை இருக்க கூடாது என்று விரும்பினார்.அதனை உறுதி செய்ய பணியாற்றி வந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் இந்த நடவடிக்கையை இப்போதே முடித்துவிட கூடாது.

நம் நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடக்கமாக இது இருக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக இன்று பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை மற்றும் ஹம்மர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. நம் நாட்டு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை பறக்கவிட்டு அதில் இருந்து ஏவுகணை, ஹம்மர் குண்டுகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நோக்கி வீசப்பட்டது. இதில் மொத்தம் 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தரைமட்டமாகின.

அதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர் இ தொய்பாவின் 3 முகாம்கள், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 முகாம்கள் என மொத்தம் 9 முகாம்கள் தரைமட்டமாகின. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.

அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ள மெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

The post பிரதமரே இதோடு நிறுத்தாதீங்க.. பஹல்காம் தாக்குதலில் மரணித்த கடற்படை அதிகாரியின் மனைவி உருக்கமான வேண்டுகோள். appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

”இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதியாக உள்ளது” – அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு

Next Post

”வியட்நாமிய புத்த அமைப்பே ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது”

Next Post
”வியட்நாமிய புத்த அமைப்பே ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது”

”வியட்நாமிய புத்த அமைப்பே ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin