[ad_1]
மணிப்பூரில் சூரசந்த்பூரில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று பாஜக தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் அவர் பிற்பகலில் இம்பால் செல்கிறார்.
சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘செப். 13’ ஒரே நாளில் குவாஹாட்டியிலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணியளவில் மிஸோரத்திற்குச் சென்றிறங்கும் மோடி, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பகல் 12 மணிளவில் சூரசந்த்பூர்(மணிப்பூர்) செல்கிறார். அங்கிருந்து பகல் 1.30 மணியளவில் இம்பால்(மணிப்பூர்) செல்கிறார்.
அங்கு நடைபெறும் இகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இம்பால் விமான நிலையத்திலிருந்து பகல் 2.30 மணிக்கு குவாஹாட்டிக்கு புறப்படுவார் என்று சொல்லப்படுகிறது.
ஆக, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே மணிப்பூரில் தங்கியிருப்பார் என்ற தகவல் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் பொதுவெளியில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.