• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Sensex rises 1000 points after Prime Minister GST reduction announcement

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பிரதமரின் ஜிஎஸ்டி குறைப்பு அறிவிப்பால் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு | Sensex rises 1000 points after Prime Minister GST reduction announcement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்​கு​கள் 2 ஆகக் குறைக்​கப்​படும் என பிரதமர் மோடி அறி​வித்​ததையடுத்​து, சென்​செக்ஸ் நேற்று வர்த்​தகத்​தின் இடையே 1,000 புள்​ளி​கள் உயர்ந்​தது. கடந்த சில வாரங்​களாக இந்​திய பங்​குச் சந்​தைகள் சரிந்து வந்​தன.

இந்​நிலை​யில், சுதந்​திர தினம் மற்​றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடு​முறைக்​குப் பிறகு நேற்று காலை​யில் இந்​திய பங்​குச் சந்​தைகள் உயர்​வுடன் தொடங்​கின. மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,000 புள்​ளி​கள் வரை உயர்ந்​தது. இது​போல தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 350 புள்​ளி​கள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்​ளி​களைக் கடந்​தது.

எனினும், பிற்​பகலில் பங்​குச் சந்​தைகள் சற்று இறக்​கத்தை சந்​தித்​தது. வர்த்தக முடி​வில் சென்​செக்ஸ் 676 புள்​ளி​கள் உயர்ந்து 81,274-ல் முடிந்​தது. நிப்டி 245 புள்​ளி​கள் உயர்ந்து 24,877-ல் நிலை பெற்​றது. தகவல் தொழில்​நுட்​பத் துறை தவிர வாக​னம், ரியல் எஸ்​டேட், உலோகம் உட்​பட் அனைத்து துறை​களின் குறி​யீட்​டெண்​களும் கணிச​மாக உயர்ந்​தன. சிறு நிறு​வனங்​கள் குறி​யீட்​டெண் (1.14%), நடுத்தர நிறு​வனங்​கள் குறி​யீட்​டெண் (1.43%) ஆகிய​வை​யும் உயர்ந்​தன.

டெல்லி செங்​கோட்​டை​யில் நடை​பெற்ற 79-வது சுதந்​திர தின விழா​வில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, ஜிஎஸ்டி வரி விதி​கம் மாற்றி அமைக்​கப்​படும் என தெரி​வித்​தார். இதனால், கார், பைக் உள்​ளிட்ட வாக​னங்​கள் விலை குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால் வாக​னத் துறை பங்​கு​கள் நேற்று கணிச​மாக உயர்ந்​தன.

மோடி தலைமையில் ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரு அடுக்கு வரி விகிதங்களாக மாற்றுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.



Read More

Previous Post

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்! | australia to play with south africa today in first match of odi series

Next Post

ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் – அதிபர் டிரம்ப் | உலகம்

Next Post
ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் – அதிபர் டிரம்ப் | உலகம்

ரஷ்யா - உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் - அதிபர் டிரம்ப் | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin