Last Updated:
வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிகார் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது அவரது வேட்புமனு மூலமாக வெளிவந்திருக்கிறது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, பிகாரின் பங்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் முதன் முறையாக களம் காண்கிறார். வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது அவரது வேட்புமனு மூலமாக வெளிவந்திருக்கிறது. அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், தன்னிடமும், தன் மனைவியிடமும் சேர்த்து 198 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மனைவி ஜானவி தாஸ் பெயரில் 102 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் கையில் 65 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 475 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பிரசாந்த் கிஷோரிடம் கார் இல்லை என்றும், 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jul 14, 2026 12:22 PM IST


