• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு! | chess grandmaster Praggnanandhaa gets a rousing welcome in chennai

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு! | chess grandmaster Praggnanandhaa gets a rousing welcome in chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தாவும், உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷும் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் துபாய் வழியாக நேற்று காலை சென்னை வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரக்ஞானந்தா கூறியதாவது:

கடந்த 85 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொடரில் அதிக அளவிலான உலக சாம்பியன்கள் விளையாடிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு பாதியில் என் ஆட்டம் நன்றாக இல்லை. தற்போது 2025-ம் ஆண்டில் முதல் தொடரிலேயே வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொடருக்காக நிறைய பயிற்சிகள் எடுத்து வந்தேன்.

இந்த ஆண்டில் முக்கிய செஸ் தொடர்கள் நடைபெற உள்ளது. இதனால் தற்போதைய வெற்றியை முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன்.

இந்த தொடரில் நான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மகிழ்ச்சியாகவே விளையாடினேன். கடைசி சுற்று மட்டும் பதற்றமாக இருந்தது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்க நடத்தப்பட்ட

டை பிரேக்கரில் விளையாடிய நானும், குகேஷும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் நமக்கு தான் அந்த பட்டம் கிடைத்திருக்கும். இது மிகவும் பெருமைக்குரிய ஒன்று. இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.

பிரக்ஞானந்தா அடுத்ததாக பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.



Read More

Previous Post

தேர்தலில் பாஜகவுக்காக போலி வாக்களிக்கும் அதிகாரிகள்! அகிலேஷ் வெளியிட்ட ஆதாரம்

Next Post

தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா..? என்ன சொல்கின்றனர் நிபுணர்கள்?

Next Post
தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா..? என்ன சொல்கின்றனர் நிபுணர்கள்?

தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா..? என்ன சொல்கின்றனர் நிபுணர்கள்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin