Last Updated:
யோசிமைட் தேசியப் பூங்காவில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஃபயர்ஃபால் நிகழ்வை காண ஆயிரக்கணக்கானோர் El Capitan மலையில் அருவி, சூரியன், வானம் இணையும் நேரத்தில் திரளாக வருகின்றனர்.
அமெரிக்காவில் பிப்ரவரி மாதத்தில் நிகழும் ஃபயர்ஃபால் நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கானோர் யோசிமைட் பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியாரா நெவாடா மலைப் பகுதி, நெடுந்துயர்ந்த ராட்சத மரங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை கொண்ட அழகிய சுற்றுலாத் தலமாகும். அங்குள்ள யோஸ்மைட் தேசியப் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஃபயர்ஃபால் நிகழ்வு மிகப் பிரசித்தம்.
எல்கேப்பிடன் மலையில் இருந்து வெகு உயரத்தில் இருந்து கீழ்நோக்கி விழும் நீர்வீழ்ச்சி, நெருப்புக் குழம்பு கொட்டுவது போல் ரம்மியமாக காட்சி தரும். சூரியன் மறையும்போது அதன் ஆரஞ்சு நிறக் கதிர்வீச்சு, அந்த நீர்வீழ்ச்சியின் மீது சரியான கோணத்தில் விழ அது நெருப்புக் குழம்பு கொட்டுவது போல் காட்சி தரும்.
இதனைத்தொடர்ந்து சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் இந்நிகழ்வு, பிப்ரவரியில் அதுவும் மாலை வேளையில் மட்டும் நிகழ்வதால் ஏராளமானோர் அங்கு சென்று கொண்டிருக்கின்றனர். எனினும், அருவியில் அதிக நீர் வீழ்ச்சி, தெளிவான வானம், சூரியனின் சரியான கோணம் ஆகியவை சரியாக அமையாதபோது இந்நிகழ்வு ஏற்படாது.
பிப்ரவரி மாதத்தில் நிகழும் ஃபயர்ஃபால்.. அமெரிக்காவின் யோசிமைட் பகுதியில் நடப்பது என்ன?


