மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆடும் பங்களாதேஷ் அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட் மாத்திரம் கைவசம் இருக்க 181 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.
அன்டிகுவாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 450 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி ஆட்ட நேர முடிவில் 98 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மொமினுல் ஹக் (50) மற்றும் ஜகர் அலி (53) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பங்களாதேஷ் அணி 181 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கி இருக்கும் சூழலில் அந்த அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
The post பின்தங்கியது பங்களாதேஷ் appeared first on Thinakaran.
