• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பினாங்கு ஆலயங்களில் இலக்கவியல் நிர்வாக நடைமுறை அதிகாரப்பூர்வ தொடக்கம்; கோபிந்த் சிங் டியோ  | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 27, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
பினாங்கு ஆலயங்களில் இலக்கவியல் நிர்வாக நடைமுறை அதிகாரப்பூர்வ தொடக்கம்; கோபிந்த் சிங் டியோ  | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பட்டர்வொர்த்,இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மலேசிய இந்து ஆலயங்கள் ஆர்வம் கொண்டுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்  சிங் டியோ தெரிவித்தார். பினாங்கு மாநில ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறை முகப்புச் செயலி இலக்கவியல் அமைச்சர்கோபிந் சிங் டியோ தலைமையில் நேற்றிரவு பட்டவெர்த் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அறிமுகம் கண்டது. பினாங்கு இந்து அறப்பணிவாரியம் ஆலய இலக்கவியல் நிர்வாக நடைமுறையை பினாங்கு மாநில ஆலயங்களுக்காக அறிமுகப்படுத்தியது.  PEHB எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இயங்கும் 12 கோவில்களும் இந்த இலக்கவியல் நடைமுறையைப் பயன்படுத்தும் என அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார். கோவில்களில் அறிமுகப்படுத்தப்படும் இலக்கவியல் தொழில்நுட்ப நிர்வாக நடைமுறைத் திட்டம் 8 ஆலயங்களில் செயல்படும்.

  1. பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம்(KUILTHANNERMALAISHREEBALATHANDAYUTHAPANIDEVASTHANAM)
  2. ஸ்ரீ ஐயப்பசாமி கோவில்(KUILSHREEAIYAPPASWAMY,WATERFALLROAD)
  3. ஸ்ரீ கணேசர் கோவில்(KUILSREEGANESHAR,WATERFALLROAD)
  4. ஸ்ரீ நகரத்தார் கோவில் (KUILSHREENAGANATHAR,WATERFALLROAD)
  5. குவீன் ஸ்த்ரீ மாரியம்மன் கோவில்(KUILSRIMAHAMARIAMMANQUEENSTREET)
  6. பட்டவெர்த் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில்                                                         (KUILSREEMAHAMARIAMMAN,BUTTERWORTH)
  7. ஜார்ஜ் டவுன் ஸ்ரீ ராமர் கோவில்(SRIRAMARTEMPLE,GEORGE TOWN)
  8. பினாங்கு ஸ்ரீ குன் பிகாரி கோவில், பினாங்கு(PENANG ROAD,PENANG)

பினாங்கு மாநிலத்தில்,இந்த முன்னோடி முயற்சியாக  கோவில்களுக்கு ஒரு புதிய டிஜிட்டல் யுகத்தை அறிமுகப்படுத்துகிறது என அமைச்சர் மேலும் கூறினார். ஆலயங்களில் இலக்கவியல் நிர்வாக நடைமுறை,பக்தர்களின் தேவைகளுக்காக அதிநவீன சுய-கியோஸ்க் இயந்திரம் மற்றும் செயலியை சமீபத்திய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் இணைகிறது. நமது சமூகத்தோடு, நாட்டையும், இலக்கவியல் தொழில்நுட்பத்தையும் டிஜிட்டல் தளத்தையும் நோக்கி கொண்டு செல்வதற்கான மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு இது ஒத்திசைகிறது.

Grasp Software Solutions SdnBhdநிறுவனத்தால்உருவாக்கப்பட்ட  இந்த இலக்கவியல் நிர்வாக நடைமுறை, இலக்கவியல் துறையில் முன்னேறுவதற்கான ஒரு புரட்சியும் கூட என அமைச்சர் கூறினார். ஏனென்றால், ஒருமித்த முறையாக அல்லாமல், தனித்தனி ஆலயங்களின் தேவைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் இந்த இலக்கவியல் நிர்வாக நடைமுறை மாற்றியமைக்க வல்லது. அதோடு கோவில்கள் மட்டும் அல்லாது மலேசியாவிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், ஆலய நிர்வாக நடைமுறைகளை  சுலபமாக நிர்வாகிக்கவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் இது உதவும். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை ஆலயங்களும் பிற வழிபாட்டுத் தலங்களும் ஏற்றுக் கொள்வதைத் தாம் ஊக்குவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே PEHB தலைவர் ஆர்.என்.எஸ். ராயர் கூறுகையில், “இன்று, நாம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் காண்கிறோம், இங்கு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கோயில் நிர்வாக நடைமுறை,மலேசியாவின் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கம் கண்டது.

இன்று முதல் கட்டமாக  பினாங்கில் உள்ள சில கோயில்கள் உட்பட எட்டு கோயில்கள், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட் இலக்கவியல் நடைமுறைய  செயல்படுத்த முடிவு செய்துள்ளன. PEHB இன் கீழ் உள்ள பிற் கோவில்களும் இந்த இலக்கவியல் நிர்வாக நடைமுறையைப் பயன்படுத்தும் என ஆர்.எஸ்.என் ராயர் உறுதி கூறினார்.

இந்த இலக்கவியல் முகப்புக் கருவியின் நன்மைகள்:

  • அந்நிய ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அல்லது தவிர்க்க முடியும் / அதிகமானோரை வேலைக்கமர்த்த வேண்டிய அவசியம் இல்லை
  • ஆலய நிர்வாக கணக்குக் வழக்கு,பக்தர்களின் நன்கொடைகள், ஆலய நிதி நிர்வாகத்தை முறையாக பராமறிக்கவும் நேர விரையத்தைக் குறைக்கவும் இயலும்
  • வெளிப்படையான, முறையான நிர்வாகத்துக்கு இது வழிவகுக்கும்
  • அரசாங்கத்தின்முயற்சிகளுக்குஏற்ப இலக்கவியல் (டிஜிட்டல்) மயமாக்கல் விழிப்புணர்வை மேம்படுத்தும்
  • கோயில்நிர்வாகத்திற்கான இலக்கவியல் கருவி, கோவில் நிர்வாகத்தைத் திறம்பட கையாளவும், பக்தர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவும் உதவும்

பக்தர்கள் QR குறியீடு, கடன் அட்டை, கடன் பற்று அட்டை போன்ற ரொக்கமில்லா முறைகளைப் பயன்படுத்தி தானியங்கி கியஸ்க் அல்லது திறன்பேசி வழி அர்ச்சனைமற்றும் பிற வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். ஆலயத்தில்திருமணம், நிகழ்ச்சிகள் தொடர்பாக ஆலய மண்டபங்களை நுட்ப நாள்காட்டி நிர்வாக முறையில், இணையம் வழியாகவே  ஒப்பந்தங்கள் செய்யவும், கட்டணம் செலுத்தவும், சுலபமாக முன்பதிவு செய்யவும் இயலும். இந்தஇணையமுகப்பின்வழி, இருந்த இடத்திலேயே பக்தர்கள் தங்கள் காணிக்கையைச் செலுத்தவும், உபய ஏற்பாடுகளுக்கும் முன் பதிவும் செய்யலாம்.

அதோடு அன்னதான ஏற்பாடுகள், சிறப்புப் பூஜைகள் போதும் முன்கூட்டியே சென்று, ஆலயத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்துவிட்டு, மீண்டும் வேறொருநாள் ஆலய பூஜைக்குச் செல்லத் தேவையில்லை. பக்தர்கள் வெளி ஊர்களிலோ, வெளி மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்தாலும் கூட தங்களது இஷ்ட ஆலயங்களில், இருந்த இடத்திலிருந்தே முன்னேற்பாடுகள் செய்ய இந்த இலக்கவியல் திட்டம் உதவுகிறது. இது பக்தர்கள் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்துவதோடு, ஆலய நிர்வாகம் சிறப்பாகவும் துல்லியமாகவும் செயல்பட உதவும். ஆக, நம் நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களுக்கு மட்டும் அல்லாமல், அந்தந்தஅமைப்பின்நிர்வாகத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்களை முறையாகவும் சுலபமாகவும் நிர்வகிக்க இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.

 



Read More

Previous Post

இந்தியா உடனான வர்த்தக முறிவால் பாகிஸ்தானில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம்! | Trade breakdown with India Threat to drug supply in Pakistan

Next Post

காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு

Next Post
காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு

காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin