பினாங்கில் நேற்று முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இன்மை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்திலுள்ள சூப்பர்மார்க்கெட்டுகள், கடைகள், உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள், மருந்தகங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டி பைகள் வழங்கப்பட மாட்டாது.
இந்நிலையில், சிலர் பிளாஸ்டிக் பைகளை பணம் கொடுத்து வாங்கலாம் என எண்ணி குழப்பத்தில் இருப்பதாக தமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக Penang Green Council (PGC) நிர்வாக இயக்குநர் ஜோசபின் டான் மேய் லிங் தெரிவித்ததார். எனவே, முதல் ஆறு மாதங்கள், இதை விளக்கும் விதமாக பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான ‘இலவச பிளாஸ்டிக் பைகள் இல்லை’ என்னும் திட்டத்தில், பினாங்கு மாநிலம் முன்னோடியாக திகழ்ந்தது.
இதற்கு முன்பு, திங்கள் முதல் புதன் வரை பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படாது என்பதுடன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் ஒரு பிளாஸ்டிக் பையிக்கு RM1 கட்டணம் விதிக்கப்பட்டது. 2009 முதல் இதுவரை, இத்திட்டத்தின் மூலம் பினாங்கு அரசுக்கு RM8 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது என குறிப்பிடத்தக்கது.
The post பினாங்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இன்மை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

