தாசேக் கெலுகோர் ,
தாசேக் கெலுகோர் பகுதியில் உள்ள நான்காவது பன்றி பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever – ASF) தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மாநில கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.
கம்போங் செலமாட் மற்றும் மற்ற செபராங் பிறை பகுதிகளில் உள்ள பண்ணைகள் பன்றி காய்ச்சல் தொற்றில் இருந்து பாதுகாப்பாக உள்ளன என மாநில கால்நடைத் துறை இயக்குநர் டாக்டர் சைரா பானு முகமட் ரெஜாப் குறிப்பிட்டார்.
“இந்த நோய் தொற்று உள்ள பன்றிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இல்லை. இதுவரை 1,083 பன்றிகள் இரண்டு பண்ணைகளில் அளிக்கப்பட்டுவிட்டன எனவும் அவற்றின் உடல்கள் பண்ணையாளர்களின் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன எனவும் மீதமுள்ள இரண்டு பண்ணைகளிலும் நாளை முதல் நடவடிக்கை நடைபெறும்,” எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், “மீதமுள்ள பண்ணைகளில் உள்ள பல பன்றிகள் பல இறந்துவிட்டன. அவைகளின் உடல்களை செபராங் பிறாய் உத்தரா பகுதியிலுள்ள அரசு நிலத்தில் புதைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலம் தேசிய மின்சார வாரியத்தின் (TNB) உரிமையில் உள்ளது. இங்கு செயல்படுவது சற்று சவாலாக இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
மொத்தமாக பாதிக்கப்பட்ட நான்கு பண்ணைகளில் சுமார் 6,000 பன்றிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இழப்புகள் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.