பட்டர்வொர்த்:
பினாங்கின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மத்திய செபராங் பிறையில் உள்ள பெனாந்தி மற்றும் தனா லியாட் மற்றும் வடக்கு செபராங் பிறையில் உள்ள சுங்கை துவா ஆகியவை இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த கிராம மக்கள் முழங்கால் அளவு வெள்ளத்தில் தத்தளிப்பதை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.
நள்ளிரவு முதல் இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 21) அதிகாலை வரை பெய்த கனமழைக்குப் பிறகு, திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக சிவில் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மழையால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது என்றும், இருப்பினும் காலை 5 மணியளவில் மழை நின்ற பிறகு வெள்ளம் வடியத்தொடங்கியது என்றும் அவர் சொன்னார்.
வெள்ளம் காரணமாக எந்த நிவாரண மையமும் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


