Last Updated:
இந்த ஆப்ஷனை ரூ. 500க்கு ஜியோ வழங்கி வந்த நிலையில் அதனை ரூ. 50 ஆக ஜியோ குறைத்துள்ளது.
நமக்கு பிடித்தமான மொபைல் நம்பரை தேர்வு செய்யும் ஆப்ஷனை ஜியோ வழங்கி வருகிறது. இதன் மூலம் மிகக் குறைந்த விலையில் மொபைல் எண்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்திய தொலைத் தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ சமீபத்திய தகவலின்படி 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று முதன்மை நிறுவனமாக மாறியுள்ளது.
போட்டி நிறுவனங்களாக கருதப்படும் ஏர்டெல், வொடபோன் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறத் தொடங்கியுள்ளார்கள். தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பலன் கொடுக்கும் சலுகைகளை ஜியோ வழங்கி வருகிறது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் அல்லது வீட்டில் உள்ளவர்களது மொபைல் எண்களைப் போன்ற எண்ணை வழங்கும் அறிவிப்பை ஜியோ வெளியிட்டுள்ளது.
இந்த ஆப்ஷனை ரூ. 500க்கு ஜியோ வழங்கி வந்த நிலையில் அதனை ரூ. 50 ஆக ஜியோ குறைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தி வரும் மொபைல் நம்பர், வாகன பதிவு எண், பிறந்த நாள் அல்லது அதிர்ஷ்ட எண்ணைப் போன்ற மொபைல் எண்ணை பெற்றுக் கொள்ளலாம்.
July 12, 2025 7:10 PM IST
பிடித்தமான மொபைல் நம்பரை தேர்வு செய்யும் ஆப்ஷனை வழங்கும் ஜியோ.. குறைந்த விலையில் பெறுவது எப்படி?