• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிடித்தது ஒரு கேட்ச்… சம்பாதித்தது 1 கோடி ரூபாய்… டி20 கிரிக்கெட்டில் ரசிகருக்கு அடித்த ஜாக்பாட்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 29, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பிடித்தது ஒரு கேட்ச்… சம்பாதித்தது 1 கோடி ரூபாய்… டி20 கிரிக்கெட்டில் ரசிகருக்கு அடித்த ஜாக்பாட்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 29, 2025 6:50 AM IST

Cricket | இந்த விளையாட்டிலும் பெரும்பாலும் இந்திய தொழிலதிபர்களே அணிகளை வாங்கி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அதாவது SA20 கிரிக்கெட் லீக்கின் நான்காவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது.

News18
News18

டி20 கிரிக்கெட் கேலரியில் இருந்த ரசிகருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. போட்டியை பார்க்க வந்தவர் ஒரு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். அந்த சுவாரஸ்ய சம்பவம் என்ன?.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. SA20 என்னும் பெயரில் நடத்தப்படும் இந்த விளையாட்டிலும் பெரும்பாலும் இந்திய தொழிலதிபர்களே அணிகளை வாங்கி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அதாவது SA20 கிரிக்கெட் லீக்கின் நான்காவது சீசன் தற்போது தொடங்கியிருக்கிறது.

இதில் முதல் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் MI கேப் டவுன் இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. டெவன் கான்வே அதிகபட்சமாக 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மெகா இலக்கை துரத்திய MI கேப் டவுன் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரியான் ரிக்கல்டன் சிறப்பாக செயல்பட்டார்.

63 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்கள் எடுத்து அதிரடியில் பின்னி எடுத்தார். ரிக்கல்டனின் 11 சிக்ஸர்கள் மும்பை கேப் டவுனை வெற்றி பெறச் செய்யவில்லை என்றாலும், ஒரு ரசிகர் ரூ.1.07 கோடி சம்பாதிக்க அவை உதவியது. அது எப்படி முடியும் என யோசிக்கிறீர்களா? மஃபாகா வீசிய 13வது ஓவரின் நான்காவது பந்தில் ரிக்கல்டன் ஒரு சிக்ஸர் அடித்தார். அதனை கேலரியில் இருந்த ஒரு ரசிகர் ஒரு கையால் கேட்ச் பிடித்தார். அந்த ஒரு கை கேட்ச் தான் அவரை கோடீஸ்வரராக்கியது.

SA20 கிரிக்கெட் லீக்கில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் விதமாக ரசிகர்கள் பிடிக்கும் ஒரு கை கேட்ச்சுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. BetwayCatch2Million என்கிற பெயரில் போட்டியின் போது ஒரு கையால் கேட்ச் பிடிப்பவர்களுக்கு வழங்கப்படும் இந்த பரிசு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் ஆட்டத்திலேயே ஒரு கையால் கேட்ச் பிடித்து கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் அந்த ரசிகர். இதற்கிடையே, ரியான் ரிக்கல்டன் கேப் டவுன் அணிக்காக சதம் அடித்து பிரகாசித்தாலும் அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

RTI ஆணைய நிதி சுயாதீனத்திற்கான நடவடிக்கைகள் அவசியம்: BASL கோரிக்கை

Next Post

சனியால் கோடீஸ்வரர்களாகும் 2 ராசிகள் – 30 வயதுக்குப் பிறகு பொன்னாடை போர்த்தும் சனி பகவான்!

Next Post
சனியால் கோடீஸ்வரர்களாகும் 2 ராசிகள் – 30 வயதுக்குப் பிறகு பொன்னாடை போர்த்தும் சனி பகவான்!

சனியால் கோடீஸ்வரர்களாகும் 2 ராசிகள் – 30 வயதுக்குப் பிறகு பொன்னாடை போர்த்தும் சனி பகவான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin