எக்கச்சக்கமான கிரெடிட் கார்டு ஆப்ஷன்கள் கிடைக்கும்போது பிசினஸ் அல்லது பர்சனல் கிரெடிட் கார்டில் எதை வாங்க வேண்டும் என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஒவ்வொரு வகையான கார்டும் குறிப்பிட்ட பொருளாதார தேவைகள் மற்றும் செலவு செய்யும் அமைப்புகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாத வருமானம் பெறும் ஊழியராகவோ, ஃப்ரீலான்சர் அல்லது சிறுதொழில் செய்யும் நபராகவோ இருந்தால், உங்களுக்கான சரியான கார்டை தேர்வு செய்து, செலவுகளை ஒழுங்குப்படுத்தி, சிறந்த ரிவார்டுகளையும், வரிச்சலுகைகளையும் பெறலாம்.