Last Updated:
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இதுவரை இருந்து வந்த மிக உயரிய பிரிவான ‘Grade A+’ அதாவது ஆண்டுக்கு ரூ. 7 கோடி வழங்கும் முறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது
பிசிசிஐ-யின் டாப் சம்பள லிஸ்டிலிருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ 2025-26 ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 ஃபார்மேட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். ஒருநாள் போட்டி தொடர்களில் மட்டுமே அவர்கள் விளையாடி வரும் நிலையில், இருவரும் சம்பளத்திற்கான முதன்மை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வீரர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இதுவரை இருந்து வந்த மிக உயரிய பிரிவான ‘Grade A+’ அதாவது ஆண்டுக்கு ரூ. 7 கோடி வழங்கும் முறை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
தற்போது A, B, C ஆகிய பிரிவுகள் மட்டுமே உள்ளன. இதன் அடிப்படையில் ஏ பிரிவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் வழங்கப்படும்.
பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளமாக வழங்கப்படும்.
சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜுரெல், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கப்படும்.


