Last Updated:
டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வுபெற்றுள்ள நிலையிலும் இருவரும் ஏ பிளஸ் பிரிவிலேயே தொடருவார்கள் எனக் கூறப்படுகிறது
இந்தாண்டுக்கான பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் குறிப்பிட்ட வீரர்களுடன் மட்டும் பிசிசிஐ ஒப்பந்தம் செய்து, ஆண்டுதோறும் பல்வேறு நிலைகளாக ஊதியம் வழங்கி வருகிறது. அதன்படி ஏ பிளஸ் பிரிவில் நட்சத்திர வீரர்களான ரோகித், விராட் கோலியும் உள்ள நிலையில், அவர்கள் அதே பிரிவில் தொடருவார்கள் எனத் தெரிகிறது.
டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வுபெற்றுள்ள நிலையிலும் இருவரும் ஏ பிளஸ் பிரிவிலேயே தொடருவார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சம்பளமாக 7 கோடி ரூபாய் அளிக்கப்பட இருக்கிறது.
இதேபோல் ஊதிய ஒப்பந்தத்தில் கடந்த முறை இடம் பெறாமல் இருந்த ஸ்ரேயஸ் மீண்டும் இடம்பிடிப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஏ பிரிவு ஒப்பந்தத்தை ஸ்ரேயஸ் பெறும்பட்சத்தில் அவருக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும். ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயஸ், 5 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார்.
சையது முஸ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளிலும் ஸ்ரேயஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
April 01, 2025 7:22 PM IST


