Last Updated:
இந்த பிங்க் யானை மீது அமர்ந்து போஸ் கொடுக்கும் ரஷ்ய இளம்பெண்ணை, சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் செய்த செயலால் இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
ரஷ்யாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்தார். ஜெய்ப்பூருக்கு பிங்க் சிட்டி என்ற அடைமொழி உள்ளதால், புருலேவாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதன்படி பிங்க் சிட்டியின் அடையாளமான யானை இல்லாமல் தன் பயணம் நிறைவடையக் கூடாது என முடிவெடுத்தார்.

அதைத் தொடர்ந்து யானைக்கு பிங்க் வர்ணம் பூசி அதில் தான் அமர்ந்து வீடியோ எடுக்க திட்டமிட்டார். பிங்க் நிறம் பூச ஒப்புக் கொள்ளும் யானை உரிமையாளரை தேடிப் பிடித்து வீடியோவை பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார். அதில் யானைக்கு பிங்க வர்ணம் பூசும் காட்சியும் இடம்பெற்றுள்ளது
இந்த வீடியோ வெளியான நிலையில் நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது கலை அல்ல, பிராணிகள் வதை என சமூகவலைதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர். யானை அவதிப்படுவதை காட்சிப்படுத்தியது தவறானது என்றும் விமர்சித்து வருகின்றனர்.


