Last Updated:
ஹரியானாவில் பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவின் குருகிராமில் உள்ள வீட்டில் முகமூடி அணிந்த 3 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஹரியானாவில் பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவை குறி வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபரும், பிக்பாஸ் வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு குருகிராமில் உள்ளது. இந்த நிலையில். ஞாயிறன்று அதிகாலை 5.30 மணியளவில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. வீட்டின் வெளிப்புறத்தில் 24 முறைக்கு மேல் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
#WATCH | Haryana: Visuals from the residence of YouTuber and Big Boss OTT winner Elvish Yadav in Gurugram, where three masked miscreants opened fire at around 5:30 AM this morning. pic.twitter.com/dfABTnW82g
— ANI (@ANI) August 17, 2025
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வீட்டின் இரண்டாவது மாடியில் எல்விஷ் யாதவ் வசித்து வருகிறார். சம்பவத்தின் போது, அவர் வீட்டில் இல்லை என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Delhi,Delhi,Delhi
August 17, 2025 1:26 PM IST


