• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 02, 2026 10:17 PM IST

பிகாரில் 3 அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இருப்பதை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்

பிகாரில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் அனைத்து அமைச்சர்களும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் நிலவரப்படி, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.

இது, கடந்த 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68 ஆயிரத்து 455 ரூபாய் அதிகமாகும். மேலும், அவரது கையில் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதாகவும், 3 வங்கிக் கணக்குகளில் 57 ஆயிரம் ரூபாய் இருப்பு வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லி துவாரகாவில் ஒரு குடியிருப்பு, 2 தங்க மோதிரம், 1 வெள்ளி மோதிரம், 10 பசுக்கள், 13 கன்றுகளை நிதிஷ் குமார் வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், அம்மாநில துணை முதலமைச்சரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளார். அதில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமாகவும், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான துப்பாக்கியும் அடங்கும்.

மற்றொரு துணை முதலமைச்சரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா, நிதிஷ் குமாரை விட 8 மடங்கு அதிக சொத்து வைத்துள்ளார். இதே போன்று, நிதிஷ் குமார் அமைச்சரவையில் 3 பேரை தவிர மற்ற அனைவருமே அவரை விட பணக்காரர்கள்.

First Published :

Jan 02, 2026 10:17 PM IST

Read More

Previous Post

ரஷ்யாவை நிறுத்தத் தவறினால் உலகம் அழியும்…! ஜெலென்ஸ்கி ஆவேசம்

Next Post

ரொம்பினில் இடிந்து விழுந்த பாலம்: கர்ப்பிணி உள்ளிட்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் | Makkal Osai

Next Post
ரொம்பினில் இடிந்து விழுந்த பாலம்: கர்ப்பிணி உள்ளிட்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் | Makkal Osai

ரொம்பினில் இடிந்து விழுந்த பாலம்: கர்ப்பிணி உள்ளிட்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin