• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகார் தேர்தல் : முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகார் தேர்தல் : முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 05, 2025 6:50 AM IST

பிகார் தேர்தலில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு, நரேந்திர மோடி, அமித் ஷா, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

கோப்பு படம்
கோப்பு படம்

பிகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நாளை மற்றும் 11ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, 4 மாநில முதலமைச்சர்கள், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்கள் திரண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் நமோ செயலி மூலம் பெண்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெறும் என்றும், அதில் பெண்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். தர்பங்கா பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் அமித் ஷா, வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்தில் அழுத்தி பிகாரில் மீண்டும் காட்டு ஆட்சியை தடுக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

அதே தர்பங்கா தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், கோபால்கஞ்ச் பகுதியில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா-வும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். அவுரங்காபாத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிகாரில் தோல்வி முகத்தை தவிர்க்க பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

அதேபோல், பிகாரில் மகா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஜனவரி 14இல் மகா சக்கராந்தி நாளில் பெண்களின் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுமென ஆர்ஜேடி தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிகார் தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக பாட்னாவில் வாகனப் பேரணி சென்று ஆதரவு திரட்டினார்.

நாளை நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 314 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் Raghopur தொகுதியில் களம் காணுகிறார். தேஜஸ்வியின் சகோதரரும் ஜன்சகதி ஜனதா தள தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் Mahua தொகுதியிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி Tarapur தொகுதியிலும் மற்றொரு துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா Lakhisarai தொகுதியிலும் களம் காண்கின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 05, 2025 6:50 AM IST

Read More

Previous Post

2026 இல் நிச்சயம் இது நடக்கும்…! பாபா வாங்கா அதிர்ச்சி கணிப்பு

Next Post

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா – தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி   | Ranji Trophy | Mohsin bowls Karnataka to an innings victory

Next Post
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா – தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி   | Ranji Trophy | Mohsin bowls Karnataka to an innings victory

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: விதர்பா - தமிழ்நாடு ஆட்டம் டிரா; கர்நாடகா இன்னிங்ஸ் வெற்றி   | Ranji Trophy | Mohsin bowls Karnataka to an innings victory

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin