Last Updated:
பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நாளை வெளியாகிறது.
நாடே எதிர்பார்க்கும் பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நாளை வெளியாகிறது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளை உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவியது. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தனித்து களம் கண்டனது.
இரு கட்டத் தேர்தலில் 66 புள்ளி 91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. நாளை பகல் 12 மணிக்குள் பிகார் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க 122 இடங்கள் தேவைப்படும் சூழலில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
November 13, 2025 7:16 AM IST


