Last Updated:
பிகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்டபாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை பாட்னாவில் மகாபந்தன் கூட்டணி தலைவர்கள் கூட்டாக முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தனர்.
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரண்டு கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவை அங்கம் வகிக்கும் மகாபந்தன் கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பாட்னாவில் மகாகத்பந்தன் கூட்டணி தலைவர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெல்லாட், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தார். மேலும், துணை முதலமைச்சர் வேட்பளராக விகாஸ்ஷீல் இன்சான் கட்சி தலைவர் முகாஷ் சஹானி அறிவிக்கப்பட்ட்டார். வரும் 28ஆம் தேதி தங்களது தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அசோக் கெல்லாட் அறிவித்தார்.
பின்னர் பேசிய தேஜஸ்வி யாதவ், ஊழல் மற்றும் குற்றங்களை இயந்திரமாக கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாக கூறினார். என்டிஏ கூட்டணி வேட்பாளர் தேர்தலுக்கு பின்னர் தான் அறிவிக்கப்படுவார் என அமித்ஷா கூறியிருந்த நிலையில், நிதிஷ்குமாருக்கு அந்த கூட்டணி அநீதி இழைக்கிறது என்றும் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
October 23, 2025 12:41 PM IST


